ஒவ்வொரு பெண்ணிற்கும் தங்களது அழகின் மீது அக்கறை இருக்கும். இருப்பினும் குழந்தை என்று வரும் போது, பெண்கள் தங்கள் அழகை மறந்து, குழந்தையைத் தான் பார்ப்பார்கள். பல பெண்கள் தாய்ப்பால் கொடுத்தால், மார்பகங்கள் தளர்ந்து தொங்கும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் இடையே உள்ள பிணைப்பு இன்னும் வலுவாகும். மார்பகங்கள் தாய்ப்பால் கொடுப்பதால் மட்டும் தளர்வதில்லை என்பதை ஒவ்வொருவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையில் இதுக்குறித்த சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உண்மை #1
பெரும்பாலான பெண்கள் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகங்கள் அசிங்கமாக தொங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நிபுணர்களோ, மார்பகங்கள் தளர்ந்து போவதற்கு தாய்ப்பால் கொடுப்பது மட்டும் காரணமல்ல, வேறு சில காரணிகளும் இருப்பதாக கூறுகின்றனர்.
உண்மை #2
ஆய்வு ஒன்றில் பெண்களை இரு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவினரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் படியும், மற்றொரு குழுவினரை பாட்டில் பால் கொடுக்கும் படியும் செய்தனர். இதன் முடிவில், தாய்ப்பால் கொடுப்பதால் மட்டும் மார்பகங்களின் அழகு போவதில்லை என்பது தெரிய வந்தது.
உண்மை #3
மற்றொரு ஆய்வில் தாய்ப்பால் கொடுப்பதால், மார்பக பகுதியில் உள்ள சருமத்தின் ஆரோக்கியம் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
உண்மை #4
உண்மையில், தாய்ப்பால் கொடுப்பதை விட, கர்ப்ப காலத்தில் தான் மார்பகங்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறதாம். கர்ப்ப காலத்தில், மார்பகங்களில் தாய்ப்பால் உற்பத்தியாக ஆரம்பிப்பதோடு, மார்பகங்களின் அளவும், வடிவமும் பல மாற்றங்களை சந்திக்கிறது.
உண்மை #5
பொதுவாக உடல் பருமன் அதிகரிக்கும் போது, மார்பகங்களுக்கு அருகில் உள்ள தசைநார்கள் சற்று விரிவடைய ஆரம்பித்து, தளர ஆரம்பிக்கும்.
உண்மை #6
மரபணு காரணிகளும் மார்பகங்களின் வடிவம், அளவு மற்றும் அழகில் முக்கிய பங்கை வகிக்கிறது என்பது மறவாதீர்கள்.
உண்மை #7
அதோடு, வயது, பல பிரசவங்கள், புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள், உடல் கொழுப்பு, உடலின் செயல்பாடு போன்றவையும், மார்பகங்களின் அழகு அல்லது அசிங்கமான தோற்றத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
உண்மை #8
முக்கியமாக பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதால், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் போன்றவை வருவதற்கான அபாயம் குறைவாக கூறப்படுகிறது.
உண்மை #9
புகைப்பிடிப்பதை நிறுத்துவது, எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது, அன்றாட உடற்பயிற்சி, மார்பகங்களுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது போன்றவை மார்பகங்கள் தளர்ந்து அசிங்கமாக தொங்குவதைத் தடுக்கும்.