71d961
அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே… பிரம்மாண்ட சொகுசு வீட்டை விற்ற நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவர்!

நடிகை ஐஸ்வர்யா ராய் கணவரும், பிரபல நடிகருமான அபிஷேக் பச்சன் தனது பிரம்மாண்ட சொகுசு வீட்டை ரூ 45 கோடிக்கு விற்றுள்ளார்.

மும்பையில் 2014ம் ஆண்டு வாங்கிய சுமார் 7000 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை தான் அபிஷேக் சில தினங்களுக்கு முன்பு விற்றுள்ளார் என பாலிவுட் வெப்சைட்டுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பையில் வொர்லி பகுதியில் ஓபராய் 360 மேற்கு என்ற பெயரில் டவர் ஏ, டவர் பி என்ற இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் 2011ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டது. டவர் ஏ என்பது 52 மாடிகளைக் கொண்ட லக்சுரி ஹோட்டல். டவர் பி என்பது 90 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு.

இதன் உயரம் 360 மீட்டர் என்பதால் தான் குடியிருப்பிற்கு ஓபராய் 360 மேற்கு எனப் பெயரிட்டார்கள். அரபிக்கடலை நோக்கி மேற்குப் பக்கம் பார்த்தபடி அனைத்து வாசற்படிகளும் இருக்குமாம்.

இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால் இந்தியாவிலேயே உயரமான கட்டிடம் எனப் பெயர் பெறும். இந்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டவர் பி கட்டிடத்தின் 32வது மாடியில் 4 கார் பார்க்கிங் வசதியுடன் 2014ம் ஆண்டு 41 கோடி ரூபாய்க்கு வாங்கிய குடியிருப்பை அபிஷேக் பச்சன் தற்போது 45 கோடிக்கு விற்றுள்ளதாக பாலிவுட் வெப்சைட்டுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் விற்றதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

Related posts

கருப்பான பெண்கள் நிறமாக மாற

nathan

அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபட்டு, நல்ல அழகும் பொலிவும் பெற சூப்பர் டிப்ஸ்!…

nathan

சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகிவிடுவீர்கள் -தெரியாமல் கூட இந்த தவறை செய்திடாதீங்க

nathan

மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தி சாதனை!

nathan

உடலில் பருவால் உண்டான தழும்பை போக்கும் வழிகள்

nathan

பானி பூரி செய்வது எப்படி தெரியுமா?

nathan

முகத்தில் எண்ணெய் வடிதலை நிறுத்த இதை செய்யுங்கள்!….

sangika

கழுத்தில் கறுமை மறைய…

nathan

இதை உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்!…

sangika