30.1 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! ஆவி பிடிக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க…

Courtesy: MalaiMalar கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கும், பாதிப்பில் இருந்து மீள்வதற்கும் ஆவி பிடிப்பதும் ஒரு சிகிச்சையாக மாறி உள்ளது. ஆவி பிடிக்க பலரும் பல யுக்திகளை கையாள்கின்றனர். எவ்வளவு நேரம் ஆவி பிடிப்பது என்று தெரியாமல் ஆர்வ மிகுதியால் அதிக நேரம் ஆவி பிடித்து மூக்கின் உள் பகுதியில் வெப்பத்தால் வெந்து புண்ணாகும் அளவுக்கு சிலர் ஆவி பிடித்து விட்டு அவதிபடுகின்றனர். ஆவி பிடிப்பது எப்படி என்பது குறித்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையின் சித்தா டாக்டர் சுவாமிநாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஆவி பிடிப்பது என்பதும் ஒருவிதமான தற்காப்பு தான். பெருந்தொற்று கிருமிகள் முதலில் தாக்குதல் நடத்தும் பகுதிகளாக வாய் மற்றும் மூக்கு உள்ளது. ஆவி பிடிப்பதால் இத்தகைய கிருமிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். ஆனால், ஆவி பிடிப்பதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன.

5-ல் இருந்து 10 நிமிடங்கள் மட்டும் ஆவி பிடித்தால் போதுமானது. காலை மற்றும் இரவு ஆகிய இரு நேரங்களில் மட்டும் பிடித்தால் போதும். ஆவி பிடிப்பதற்கு தலைவலி தைலம், கற்பூரம் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. ஆவி பிடிப்பதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. நொச்சி, வேப்பிலை, மஞ்சள், துளசி, கற்பூரவள்ளி இலை ஆகியவற்றை நீரில் கொதிக்கவிட்டு அதில் ஆவி பிடிக்க வேண்டும். நீண்ட நேரம் ஆவி பிடித்தல் என்பது தற்காப்பு இல்லை.

Related posts

எச்சரிக்கை! உங்களுக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

பெண்களுக்கு ஏற்படும் பித்த நோய்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப கால நீரிழிவிலிருந்து தப்புவது எப்படி?

nathan

இரு புருவங்களுக்கு மத்தியில் அழுத்தம் கொடுப்பதால் வரும் நன்மைகள் தெரியுமா ?

nathan

காலம் மாறுகிறது: அம்மா வேலைக்கு செல்கிறார்.. அப்பா குழந்தைகளை கவனிக்கிறார்..

nathan

உங்களுக்கு தெரியுமா ஒருவருக்கு மன அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை எளிய இரத்த பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம் ?

nathan

சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் புதிய சிகிச்சை!! முயன்று பாருங்கள்

nathan

நரைமுடியை கருகருவென மாற்றும் கரும்பூலா மூலிகை எண்ணெய்!!சூப்பர் டிப்ஸ்…….

nathan

இணைய காதலில் சிக்கும் பெண்கள் தப்பிக்க என்ன வழி?

nathan