30.6 C
Chennai
Monday, Jun 17, 2024
Tamil News Ways to Remove Kajal Effectively SECVPF
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கண்ணுக்கு பூசிய காஜலை நீக்குவதற்கு டிப்ஸ்

Courtesy: MalaiMalar பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் காஜல். அவ்வாறு தினமும் காஜலைப் பயன்படுத்தும் பெண்கள் ஒரு நாள் அதனை பயன்படுத்தவில்லை என்றாலும், பார்க்க ஏதோ ஒன்று குறைந்தது போல் காணப்படுவர். அதிலும் காஜல் நிறைய வகையில் தற்போது கடைகளில் விற்கப்படுகின்றன.

மேலும் அந்த காஜலை வீட்டிலே கூட தயாரிக்கலாம் அல்லது காஸ்மெடிக்ஸ் கடைகளில் வாங்கலாம். தற்போது அவ்வாறு காஜலைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான், கண்களுக்கு போடும் காஜல் கலைந்துவிட்டு, முக அழகை கெடுத்துவிடுகின்றன. அதனாலேயே நிறைய பெண்களுக்கு கருவளையம் வந்துவிட்டது போன்று காணப்படுகிறது.

சிலசமயங்களில் அந்த காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அவை இதோ……

• தினமும் முகத்தை கிளின்சிங் மில்க்கை வைத்து கழுவ வேண்டும். இதுவும் மேக்கப்பில் ஒரு வித பகுதி தான். அதிலும் முகத்திற்கு என்னதான் மேக்-கப் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போட்டாலும், கிளின்சிங் மில்க்கால் கழுவ வேண்டும்.

அதிலும் காஜலை எளிதாக நீக்குவதற்கு, கிளின்சிங் மில்க்கை முகத்திற்கு தடவி, முகம் மற்றும் கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை ஒரு காட்டனை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் காஜல் வருவதோடு, அழுக்குகளும் வந்துவிடும். இல்லையெனில் மேக்-கப் ரிமூவல் க்ரீம் என்று விற்கப்படும் க்ரீமையும் பயன்படுத்தி நீக்கலாம்.

• காஜல் பயன்படுத்தியதால் ஏற்படும் கருவளையத்தை தடுப்பதற்கு, தினமும் படுப்பதற்கு முன், எண்ணெயை வைத்து நன்கு மசாஜ் செய்து, தூங்க வேண்டும். அவ்வாறு மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் ஆலிவ் அல்லது ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தினால் நல்லது. இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும். வேண்டுமென்றால், எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.

• வாஸ்லினை பயன்படுத்தி கண்களுக்கு அடியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் காட்டனை வைத்து, துடைக்க வேண்டும். இதனால் காஜல் எளிதில் நீங்கிவிடும்.

ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், காஜல் எளிதில் நீங்குவதோடு, கருவளையம் ஏற்படாமலும் இருக்கும்.

Related posts

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், ஆரஞ்சு தோலை இவ்வாறு பயன்படத்துங்கள்!…

sangika

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan

சூப்பர் டிப்ஸ்! கருமையை போக்கி சிகப்பழகு தரும் டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு!

nathan

பெண்களின் தழும்புகளை போக்கும் இயற்கை வழிகள்

nathan

சருமத்தை முதல்முறையே கலராக்கும் அத்திப்பழம்…எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க டிப்ஸ்

nathan

முகத்தில் ஆப்பிள்சாறு

nathan

பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

nathan