36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

என் ரசனைக்கு அவரால் ஒத்துழைக்க முடியல… கணவருக்கும் 16 வயது வித்தியாசம்!

தமிழகத்தில் தன்னை விட 16 வயது அதிகமான கணவனை கொலை செய்துவிட்டு நாடகம் நடத்திய மனைவி பொலிசில் சிக்கிய நிலையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் பிரபு . அதே பகுதியில் வாழை இலை கடை வைத்துள்ள இவர் அவரது சொந்த அக்கா மகள் ஷாலினியை (22) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்களன்று நள்ளிரவில் யாரோ 2 பேர் வந்த நகைகளை பறித்துக் கொண்டதோடு தனது கணவர் பிரபுவை கொலை செய்துவிட்டு தப்பித்துவிட்டனர் என்று ஷாலினி, கீழே முதல் மாடியில் இருந்த உறவினர்களிடம் கூறியுள்ளார்.

உடனே இருவரும் மேலே சென்று பார்த்தபோது பிரபு உயிரற்று கிடந்துள்ளார். மாடிக்கு போகும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளபோது எப்படி திருடர்கள் வரமுடியும் என்று பிரபுவின் பெற்றோர் கேட்டதற்கு ஷாலினி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

சந்தேகமடைந்த பிரபுவின் தாயார் துளசி பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி விட்டு ஷாலினியிடம் விசாரித்த போது அனைத்து உண்மைகளும் வெளிவந்தது.

அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும் என் கணவருக்கும் 16 வயது வித்தியாசம் உள்ளது. இதனால் அவரால் என் ரசனைக்கு ஒத்துழைக்க இயலவில்லை, பேஸ்புக், வாட்ஸ் அப், என எந்த ஒரு தகவல் தொழில் நுட்ப விஷயமும் தெரியாமல் இலை கடையையே கதி என்று இருந்ததால் நான் பேஸ்புக்கில் நண்பர்களை தேடினேன்.

அப்போது எனது விருப்பத்துக்கு ஏற்றபடியே 23 வயதான காமராஜ் இருந்ததால் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதோடு அதற்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக்கட்டி பொலிசில் சிக்காமல் இருக்க கொள்ளையர்கள் வந்ததாக நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார் ஷாலினி.

மேலும் சம்பவத்தன்று நள்ளிரவு 11;30 மணி அளவில் கணவன் உறங்கி விட்டதாக செல்போன் மூலம் ஷாலு தகவல் சொன்னதை தொடர்ந்து அங்கு காமராஜ் சென்றுள்ளான். வீட்டிற்குள் படுக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிரபு முகத்தில் தலையணையால் அழுத்தி இருவரும் கொலை செய்துள்ளனர்.

பேஸ்புக்கில் வெளியிட்ட புகைபடத்தில் பள பளப்பாக தெரிந்த ஷாலினி கைது செய்யப்பட்ட போது டல்லாக உடல் பருமனுடன் காணப்பட்டதால் அது குறித்து அவரிடம் விசாரித்த போது தான் போட்டோஷாப் ஆப் ஒன்றின் மூலம் தன்னை அழகுபடுத்திக் கொண்டதாக தெரிவித்தார்.

இதனை நம்பித்தான் பேஸ்புக்கில் 50 பேர் ஷாலினியின் நட்பு வளையத்தில் சிக்கியதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பொலிசார் ஷாலினி மற்றும் காமராஜை கைது செய்துள்ளனர்.

Related posts

அடேங்கப்பா! மேக்கப் இல்லாமல் மகனுடன் மார்டன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!

nathan

நெகிழ்ச்சியில் தலைவாசல் விஜய் பதக்கம் வென்ற மகள்.

nathan

உங்களுக்கு தெரியுமா பெர்பியூம் நாள் முழுவதும் நீடிக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

உடல் எடையைக் குறைக்க நினைப்பவரா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வைரல் வீடியோ!-தாய் தந்தைக்கு கிரீடம் சூடி மகிழ்ந்த மிஸ் இந்தியா ரன்னர் மான்யா சிங்

nathan

தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா?

nathan

மிஸ் பண்ணாதீங்க..! வசீகர அழகை தரும் ஆரஞ்சு பழம்..!

nathan

உ ச்ச கட்ட க வ ர்ச்சியில் பட்டன் போடாமல் பரவசநிலையை அடைந்த பாரதிராஜா பட நாயகி..

nathan

ஆண்களுக்கு சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?

nathan