31.5 C
Chennai
Thursday, Jul 3, 2025
25 turnip masala
சைவம்

சுவையான சிவப்பு முள்ளங்கி மசாலா

இங்கு அந்த சிவப்பு முள்ளங்கி மசாலாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து பாருங்கள்.

Turnip Masala Recipe
தேவையான பொருட்கள்:

சிவப்பு முள்ளங்கி/டர்னிப் – 1 (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் – 6
மல்லி – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 3-4
பிரியாணி இலை – 1
ஏலக்காய் – 2
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் டர்னிப் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய், சீரகம், வெந்தயம், வரமிளகாய், மல்லி சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு முறை வதக்கி, அடுத்து தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, டர்னிப்பையும் உடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 7-10 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிவப்பு முள்ளங்கி/டர்னிப் மசாலா ரெடி!!!

Related posts

சூப்பரான சைடிஷ் தயிர் உருண்டை குழம்பு

nathan

தயிர்சாதம் & ஃப்ரூட்

nathan

பலாக்காய் குழம்பு செய்ய வேண்டுமா!

nathan

மிளகு பத்திய குழம்பு

nathan

சிம்பிள் ஆலு மசாலா

nathan

மாங்காய் வற்றல் குழம்பு

nathan

கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி

nathan

புத்தம் புது ‘பூ’ – தாமரைப் பூ கூட்டு

nathan

வடை கறி

nathan