26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
cauliflowerbajji 600
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான ப்ராக்கோலி பஜ்ஜி

காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பலருக்கு எப்படி செய்து சாப்பிடுவது என்று தெரியாது. ஆனால் சத்துக்கள் அதிகம் நிறைந்த அந்த ப்ராக்கோலியை மாலை வேளையில் டீ குடிக்கும் போது பஜ்ஜி போட்டு சாப்பிடலாம். அதிலும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுப்பது இன்னும் சிறந்தது.

இங்கு அந்த ப்ராக்கோலி பஜ்ஜியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்கள்.

Broccoli Bajji
தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
ப்ராக்கோலி – 2 கப்
தண்ணீர் – 1/2 கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ப்ராக்கோலியை பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ப்ராக்கோலி பஜ்ஜி ரெடி!!!

Related posts

சத்து நிறைந்த கேரட் – முந்திரி அடை

nathan

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

nathan

சத்தான எள்ளு துவையல் செய்வது எப்படி

nathan

மூங்தால் வெஜிடபிள் தோசை

nathan

ஓட்ஸ் தேங்காய் தோசை

nathan

கோதுமை ரவை பாயசம்

nathan

காளான் கொழுக்கட்டை

nathan

பச்சைமிளகாய் காரச் சீடை

nathan

சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி

nathan