32.1 C
Chennai
Sunday, Jun 30, 2024
hairgrowth 16
தலைமுடி சிகிச்சை

என்ன பண்ணாலும் முடி வளர மாட்டீங்குதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

ஒருவரது அழகில் தலைமுடியும் முக்கிய பங்காற்றுகிறது. அனைவருமே நல்ல ஆரோக்கியமான முடியை விரும்புவோம். அதற்கு தலைமுடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்தால் மட்டும் போதாது, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தூக்க நேரம் போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும். அதோடு ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருந்தால், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். ஒருவர் அதிகமாக மன அழுத்தம் கொண்டால், அது நேரடியாக தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

சிலர் தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்கிறேன் என்ற பெயரில் ஒருசில தவறுகளை தெரியாமல் செய்து வருவார்கள். இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பாழாவதோடு, அதன் வளர்ச்சியும் தடுக்கப்படும். எனவே நல்ல ஆரோக்கியமான மற்றும் வலிமையான முடி வேண்டுமானால், முதலில் நமக்கு இருப்பது எந்த வகையான தலைமுடி மற்றும் அதை எப்படி பராமரிப்பது என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம், எந்த மாதிரியான விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

கீழே தலைமுடியின் வளர்ச்சியைத் தடுக்கும் சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த விஷயங்கள் எவையென்பதைத் தெரிந்து கொண்டு, அவற்றை தவிர்த்திடுங்கள்.

அதிகமாக தலைக்கு குளிப்பது

அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் தெரிய வேண்டும் என்பதற்காக பலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள் மற்றும் சில சமயங்களில் ஒரு நாளைக்கு 2 முறை குளிப்பார்கள். ஆனால் இது மிகப்பெரிய தவறு. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இது தலைமுடியை சேதப்படுத்தி, தலைமுடி உதிர வழிவகுக்கும். அதோடு தலைக்கு அடிக்கடி குளித்தால், அது தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெயை வெளியேற்றி, முடியை பொலிவிழந்தும், ஆரோக்கியமற்றதாகவும் காட்டும்.

அதிகளவிலான வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்துவது

தற்போது மக்கள் தலைமுடிக்கு வெப்பமூட்டும் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். ஹேர் ஸ்ட்ரைட்னிங், ஹேர் கர்லர், ஹேர் ட்ரையர் போன்றவை தலைமுடியின் அமைப்பை சேதப்படுத்தும். மேலும் அது முடியின் முனைகளில் வெடிப்புக்களை உண்டாக்கி, முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே இம்மாதிரியான கருவிகளை அதிகம் உபயோகிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

ஈரமான முடியை சீவுவது

எப்போதும் ஈரமான தலைமுடியை சீவக்கூடாது. எப்போதும் முடி நன்கு காய்ந்த பின்பே தலைமுடியை சீவ வேண்டும். ஈரமான முடியானது எளிதில் உடையும். அதேப் போல் ஈரமான முடியை இறுக்கமாக கட்டக்கூடாது. இல்லாவிட்டால் முடி அதிகம் உடைந்து, தலைமுடியின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

தவறான வழியில் கண்டிஷனரைப் பயன்படுத்துவது

சிலர் கண்டிஷனரைப் பயன்படுத்தவே மாட்டார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. எப்போதுமே முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது, கண்டிஷனரை முடியில் மட்டும் படுமாறு, ஸ்கால்ப்பில் படாதவாறு பயன்படுத்த வேண்டும். ஸ்கால்ப்பிற்கு கண்டிஷனரைப் பயன்படுத்தினால், அது முடி உதிர்தலுக்கு வழிவகுத்து, நாளடைவில் முடியின் வளர்ச்சியையே தடுத்துவிடும்.

துணியால் முடியை தேய்ப்பது

தலைக்கு குளித்த பின் பலர் தலைமுடியை உலர்த்துவதற்கு, துணியால் தலைமுடியை தேய்த்து துடைப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். தலைமுடியை எப்போதுமே தேய்த்து உலர்த்தக்கூடாது. அப்படி தேய்த்தால், துணியுடன் முடி உரசும் போது, அது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். ஆகவே ஆரோக்கியமான தலைமுடி வேண்டுமானால், இந்த செயலை தவிர்த்திடுங்கள்.

Related posts

உங்க நெற்றி மேல ஏறிட்டே இருக்கா? முடி உதிர்வை தடுக்க அற்புதமான டிப்ஸ்!

nathan

அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெற மேற்கொள்ள வேண்டியவைகள்!!!

nathan

உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை உள்ளதா? நெல்லிக்காய் தைலம் முயற்சி செய்துபாருங்கள்..!!!

nathan

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்ட்டெனிங் ஜெல் தயாரிப்பது எப்படி? எளிய முறை

nathan

முடியை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த எளிய மற்றும் உபயோகமான வழிகளே போதுமாம்…!

nathan

ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக்கும் வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த மிளகாயை எண்ணெயில் கலந்து தேய்ச்சா முடி நீளமா வளருமாம்…

nathan

கொத்து கொத்தா முடி கொட்டுதா? இதை முயன்று பாருங்கள் !

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…நரை முடியால் மீண்டும் கருமையாக மாற முடியுமா?

nathan