28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
p49d
சிற்றுண்டி வகைகள்

பனீர் பாஸ்தா

தேவையானவை:

வேக வைத்த பாஸ்தா – 200 கிராம்
பனீர் – 100 கிராம் (துருவவும், சில பீஸ்களை சிறிதாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்)
கேரட் – 1 பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – அரை டீஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – அரை டீஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
டொமேட்டோ சாஸ் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் – கால் டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் – 2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி, டொமேட்டோ சாஸ் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கவும். இதில் கேரட் சேர்த்து சில நிமிடம் வதக்கி, பின்னர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வதங்கியதும் பனீர் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு கலவையை வேக விடவும். வேக வைத்த பாஸ்தாவை இதில் சேர்த்து, தீயைக் குறைத்து எல்லாம் சேர்ந்து வரும்போது கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை தூவி இறக்கி, லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பவும்.
p49d

Related posts

ஆரோக்கியமான ஓட்ஸ் வெங்காய தோசை

nathan

ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ்

nathan

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan

கம்பு இட்லி

nathan

வாழை இலை கொழுக்கட்டை

nathan

தினை சீரக தோசை

nathan

சவ்சவ் கட்லெட்

nathan

சுவையான அரிசி பக்கோடா

nathan

சூப்பரான ஜவ்வரிசி வடை

nathan