அதிகப்படியான உடல் பருமனால், நிறைய அவமானங்களை சந்தித்துள்ளீர்களா? அந்த உடல் எடையைக் குறைக்க பல கடுமையான செயல்களை பின்பற்றியுள்ளீர்களா? இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லையா? அப்படியெனில் நீங்கள் உடல் எடையைக் குறைக்க பின்பற்றும் செயல் ஆரோக்கியமானது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் சற்று பொறுமை அவசியம். ஏனெனில் ஆரோக்கியமான வழியைப் பின்பற்றும் போது, அதனால் பலன் தாமதமாக கிடைத்தாலும், வாழ்நாள் முழுவதும் நன்மை கிடைக்கும். ஆனால் விரைவில் எடையைக் குறைக்க முயற்சிக்க பின்பற்றும் செயல்களால், எடை சீக்கிரம் குறைந்தாலும், அது தற்காலிகமானதாக இருக்கும். மேலும் எடையைக் குறைக்க பின்பற்றியவைகளை நிறுத்திவிட்டால், மீண்டும் பழைய நிலைக்கு வரக்கூடும்.
ஆகவே உங்கள் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்கவும், சீராக பராமரிக்கவும், அன்றாடம் காலை வேளையில் ஒருசில விஷயங்களை தவறாமல் செய்து வர வேண்டும். மேலும் காலை வேளையில் பின்பற்றுவதற்கு முக்கிய காரணம், காலையில் நம் மனதில் எந்த ஒரு டென்சனும் இருப்பதில்லை. இதனால் நம் நோக்கத்தில் சரியாக கவனம் செலுத்தி, உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முடியும். சரி, இப்போது உடல் எடையைக் குறைக்க காலை வேளையில் செய்ய வேண்டிய ஆரோக்கியமான விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!
தண்ணீர் குடிக்கவும்
காலையில் எழுந்ததும், பிரஷ் செய்து வாயை சுத்தம் செய்த பின்னர், 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். இதனால் மனம் மற்றும் உடல் புத்துணர்ச்சி அடையும். முக்கியமாக வெதுவெதுப்பான நீர் குடிப்பதால், உடலில் உள்ள கலோரிகளை கரையும்.
எலுமிச்சை ஜூஸ்
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் போடப்பட்ட எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
ஏலக்காய் டோஸ்ட்
காலையில் பசிக்கிறதா? அப்படியெனில் டோஸ்ட் செய்து, அதன் மேல் சிறிது ஏலக்காய் பொடியைத் தூவி, சூடாக உட்கொள்ளுங்கள். இதனாலும் கலோரிகள் விரைவில் கரையும்.
தேன் சேர்க்கப்பட்ட க்ரீன் டீ
காலை வேளையில் மேற்கொள்ளும் விஷயங்களில் ஒன்று தேன் சேர்க்கப்பட்ட க்ரீன் டீயை குடிப்பது தான். இப்படி ஒரு நாளை ஒரு கப் க்ரீன் டீயுடன் தினமும் தொடங்கிப் பாருங்கள். இதனால் உங்கள் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.
ரன்னிங்
உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியும் மிகவும் இன்றியமையாத ஒன்று. அதிலும் எடையைக் குறைக்க நீங்கள் செய்யும் உடற்பயிற்சி மிகவும் சுலபமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு ரன்னிங் தான் மிகவும் சிறந்தது. இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் கரைய ஆரம்பித்து, எடை குறைய ஆரம்பமாகும்.
ஆரோக்கியமான காலை உணவு
உடல் எடையைக் குறைக்க நினைத்தால், காலையில் ஆரோக்கியமான காலை உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதிலும் 3 இட்லி, 1 வேக வைத்த முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது.
அதிகப்படியான ஓய்வு வேண்டாம்
உடல் எடையை ஆரோக்கியமான வழியில் சற்று வேகமாக குறைக்க நினைத்தால், நீண்ட நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் மறக்க வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்.
சூரிய வெளிச்சத்தைப் பெறுங்கள்
உணவுகளின் மூலமே அனைத்து வைட்டமின்களையும் பெற்றுவிடலாம் என்று நினைக்க வேண்டாம். ஒருசில வைட்டமின்களை எதன் மூலம் பெற வேண்டுமோ அதன் மூலம் பெற்றால் தான் நல்லது. அதில் உடலுக்கு வேண்டிய வைட்டமின் டி சூரிய ஒளியின் மூலம் பெற்றால் தான் நல்லது. ஏனெனில் வைட்டமின் டி உணவுப் பொருட்களில் இருப்பதை விட, சூரிய ஒளியில் தான் அதிகம் உள்ளது. எனவே அதிகாலையில் சூரிய ஒளி படும்படியான இடத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
ஜிம் செல்லுங்கள்
உங்களுக்கு வெறும் வாக்கிங், ரன்னிங் மட்டுமே செய்ய பிடிக்காவிட்டால், ஜிம்மில் சேருங்கள். அதிலும் ஜிம்மில் காலையில் குறைந்தது 40 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள். அதற்கு காலையில் வேகமாக எழும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
ஆயில் புல்லிங்
காலையில் எழுந்ததும் வாயை நீரில் கொப்பளித்த பின்னர், வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 15-20 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வெளியேறி, வாய் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேறும். மேலும் உடலியக்கம் சீராக இருக்கும். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.