30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

எளிதான டிப்ஸ் இதோ! உடல் சூட்டை விரட்டியடித்து உடலை குளிர்ச்சியாக்குவது எப்படி?

பலரும் உடல் சூடு பிரச்சினையால் அவதிப்படுவார்கள்.

உடல் உஷ்ணத்தை தணித்து, உடல் சூட்டை விரட்டியடித்து உடலை குளிர்ச்சியாக்கும் பானங்கள் குறித்து பார்ப்போம்.

எள்

இது உடல் எடையை சீராக பராமரிக்கும் தன்மை கொண்டது. தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டேபிள்ஸ்பூன் எள்ளை அப்படியே மென்று சாப்பிடலாம். இதனை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

 

தண்ணீர்

உடலை குளிர்ச்சி படுத்துவதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் பருகுவது நீரிழப்பை தடுக்க உதவும்.

வெந்தயம்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று, தண்ணீர் பருக வேண்டும். கோடையில் இந்த பழக்கத்தை தவறாமல் பின்பற்றி வந்தால் உடல் வெப்பம் தணிந்து விடும்.

சந்தனம்

குளிர்ந்த நீர் அல்லது குளிர்ந்த பாலில் சந்தனத்தை போட்டு குழப்பி நெற்றி, தாடை, முகத்தில் தடவிவிட்டு உலர்ந்ததும் கழுவி விடலாம். உடல் சூடு குறைந்துவிடும். மேலும் சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்தும் முகத்தில் உபயோகிக்கலாம். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும்.

பால்

பாலுடன் தேன் கலந்து பருகி வருவதும் உடல் வெப்பத்தை தணிக்க உதவும்.

இளநீர்

கோடையில் உடல் வறட்சி ஏற்படாமல் தடுத்து, குளிர்ச்சியை தக்கவைக்கும் தன்மை கொண்டது இளநீர். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பானமாகவும் இது விளங்குகிறது.

மோர்

இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ளக்கூடியது. மோரில் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் சத்துக்கள் அனைத்தும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Related posts

சளித்தொல்லையில் இருந்து விடுபட அருமையான வைத்தியம்!

nathan

தெரிஞ்சிக்கங்க… ஓயாத விக்கலா இதோ சித்த மருத்துவத்தில் உடனடி தீர்வு

nathan

உடல், மன, கேச நலம் காக்கும், நோய்களைத் தடுக்கும்… சாம்பிராணி தூபம்!

nathan

உங்க ஈறுகளில் இரத்தம் வடிதலை தடுக்க தினமும் காலையில் இத குடிங்க!

nathan

நீங்கள் அடிக்கடி வெந்நீர் குடிப்பவரா ? அவசியம் படிங்கள்….

nathan

தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்க உதவும் ஆரோக்கிய உணவுகள் !!

nathan

“எத்தனை நாளுக்கு பிரஷ்ஷை பயன்படுத்துவது’

nathan

நீரிழிவு நோயாளர்களுக்கு அருமருந்தாகும் கொவ்வைக்காய்!

nathan

டூத் பேஸ்டை கொண்டு கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி தெரியுமா?

nathan