28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
glow skin1
முகப் பராமரிப்பு

முகத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கணுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

க்ரீன் டீ, ரெட் ஒயின் மற்றும் தயிர் ஆகியவை ஆரோக்கியமான உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எப்போதும் கூறுவார்கள். ஆனால் இந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. பொலிவிழந்து, வயதான தோற்றத்தைத் தரும் சருமத்திற்கு புத்துயிர் அளிக்க பழங்காலத்தில் இருந்தே தயிர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

க்ரீன் டீயில் உள்ள சத்துக்கள், சரும செல்களுக்கு ஊட்டமளித்து சருமத்தின் பொலிவை அதிகரிக்கிறது. மறுபுறம் ரெட் ஒயின் இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பதிலும், அழகை மேம்படுத்துவதிலும் அறியப்படுகிறது. இப்படிப்பட்ட இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து ஃபேஸ் மாஸ்க் போட்டால் என்ன ஆகும்? நிச்சயம் முகத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரிவதோடு, உங்களை ஆச்சரியப்படவும் வைக்கும்.

ரெட் ஒயின், க்ரீன் டீ, தயிர் ஃபேஸ் பேக்

பலரது அழகின் ரகசியமாக ரெட் ஒயின், க்ரின் டீ மற்றும் தயிர் ஃபேஸ் பேக் திகழ்கிறது. இந்த மூன்று பொருட்களிலும் சரும செல்களுக்கு ஊட்டமளிக்கும் மற்றும் நன்மை அளிக்கும் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், இந்த ஃபேஸ் பேக் போட்டதும், முகத்தில் உடனடி மாற்றம் தெரியும்.

ஃபேஸ் பேக்கை தயாரிக்க தேவையானவை:

வீட்டிலேயே முக அழகை அதிகரிக்க நினைப்பவர்கள், பின்வருமாறு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு க்ரீன் டீ பேக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அரை கப் சுடுநீரை எடுத்துக் கொள்ளவும்.

* பின்பு ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ளவும்.

* அதேப் போல் ரெட் ஒயின் 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:

* முதலில் அரை கப் சுடுநீரில் க்ரீன் டீ பேக்கைப் போட்டு சில நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* பின் அதில் தயிர் மற்றும் ரெட் ஒயினை சேர்த்து நன்கு ஒருசேர கலக்க வேண்டும். இந்த கலவைவை நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.

* 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முத்தைக் கழுவவும்.

ஃபேஸ் பேக்கின் நன்மைகள்

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்

இந்த ஃபேஸ் பேக்கில் ஒயின் சேர்ப்பதால், அது சருமத்தை பிரகாசமாக வெளிக்காட்டும். ஏனெனில் இதில் உள்ள ரெஸ்வெராட்ரோல் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள், சருமத்தில் முதுமைத் தோற்றத்தைத் தடும் முதுமைக் கோடுகளையும், சுருக்கங்களையும் தடுத்து, சருமத்தில் இரத்த ஓட்டம் மற்றும் அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து இளமைத் தோற்றத்தைத் தரும்.

க்ரீன் டீயின் அழகு நன்மைகள்

க்ரீன் டீயில் பாலிஃபீனால்கள் மற்றும் ஆறு வகையான கேட்டசின்கள் உள்ளன. இவை ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும் இது பொலிவிழந்த சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், நீண்ட காலம் இளமைத் தோற்றத்துடன் இருக்க உதவி புரிகிறது. க்ரீன் டீ என்பது வைட்டமின் பி2 இன் வளமான மூலமாகும். இது சருமத்தில் கொலாஜென் அளவைப் பராமரிக்க உதவுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளதால், அலர்ஜி மற்றும் பிற சரும பிரச்சனைகளையும் தடுக்கிறது.

தயிரின் அழகு நன்மைகள்

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள முதுமைக் கோடுகள் மற்றும் சுருக்கத்தைப் போக்க உதவுகிறது. இது சருமத்துளைகளை இறுக்கச் செய்து, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது. மேலும் தயிர் சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவி, சருமத்தை வறட்சியடையாமல் மென்மையாக வைத்திருக்கிறது. அதோடு, பொலிவிழந்த சருமத்திற்கு பொலிவூட்டுகிறது.

Related posts

சிகப்பாக சில டிப்ஸ்..

nathan

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்:

nathan

பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan

முகம் பொலிவுடன் மிளிர……..

sangika

இதை முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இளமையாக மாறும்…..

sangika

ஜொலிக்கும் சருமத்தை பெற ‘இந்த’ எண்ணெயில் நீங்களே தயாரிக்கும் ஃபேஸ் பேக்கை யூஸ் பண்ணுங்க!

nathan

உங்க சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த விஷயங்கள மறக்காம செய்யணுமாம்…

nathan

முகத்தின் கருமையை போக்கும் இயற்கை மாஸ்க்குகள்

nathan

முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவது குறைய

nathan