28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
28 prawn gravy
அசைவ வகைகள்

சுவையான இறால் கிரேவி

இந்த வாரம் இறால் சாப்பிட ஆசையாக உள்ளதா? அப்படியானால் அதனை வாங்கி வந்து கிரேவி செய்து சாதத்துடன் சாப்பிடுங்கள். இறாலைக் கொண்டு எப்படி கிரேவி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

இங்கு மிகவும் எளிமையான இறால் கிரேவியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செய்முறையானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். அதைப் படித்து பார்த்து, முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

இறால் – 1 கப் (சுத்தம் செய்தது)
சின்ன வெங்காயம் – 1/4 கப்
பூண்டு – 6 பற்கள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
தக்காளி – 2 (அரைத்தது)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 3/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச்
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை – சிறிது

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 1/4 கப்
சோம்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நீரில் நன்கு சுத்தமாக கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் தேங்காய், சோம்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி, மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பின்பு அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 3 நிமிடம் இறால் சுருங்கும் வரை கிளறி, பின் அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, இறால் மென்மையாக வெந்தமும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, எண்ணெயும், கிரேவியும் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், இறால் கிரேவி ரெடி!!!

Related posts

கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்பு

nathan

அரைத்துவிட்ட மீன் குழம்பு|Arachu vacha meen kulambu

nathan

சிக்கன் லாலிபாப் / Chicken Lollipop

nathan

ஆட்டுக்கால் பாயா

nathan

நாட்டுக்கோழி வறுவல்

nathan

செட்டிநாடு மட்டன் பிரியாணி

nathan

காரைக்குடி மீன் குழம்பு

nathan

மாட்டு இறைச்சி சமோசா

nathan

மட்டன் பிரியாணி,பிரியாணி, மட்டன், மட்டன் பிரியாணி

nathan