கர்ப்ப காலம் ஒரு பெண்ணிற்கு தன் வாழ்வில் மறக்க முடியாத கஷ்டங்களுடன் கூடிய ஓர் இனிமையான தருணங்களாகும். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, அவளது உடலினுள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
ஆனால் கர்ப்ப காலத்தில் மற்றும் வயிற்றில் வளரும் சிசுவைப் பற்றிய சில உண்மைகளைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தமிழ் போல்ட் ஸ்கை கர்ப்ப காலம் பற்றி நீங்கள் அறிந்திராத சில வியக்கத்தக்க உண்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
உண்மை #1
வயிற்றில் வளரும் குழந்தையால் உணர, பார்க்க, ஏன் கேட்க கூட முடியும்.
உண்மை #2
இரண்டாவது மூன்று மாத காலகட்டத்தில் இருந்து, கருப்பையினுள் வளரும் சிசு சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்.
உண்மை #3
எலி, முயல், மனித குரங்கு, நாய், பன்றி, திமிங்கலம் மற்றும் மனிதர்களுக்கு ஒரே அளவில் தான் கருமுட்டை இருக்கும்.
உண்மை #4
கருப்பையில் இருக்கும் குழந்தை அழும் என்பது தெரியுமா?
உண்மை #5
வயிற்றில் வளரும் குழந்தையால் தாய் உண்பதை ருசிக்க முடியும்.
உண்மை #6
ஒரு பெண்ணின் கருப்பை கர்ப்ப காலத்தில் சாதாரண நிலையை விட 500 மடங்கு விரிவடையும்.
உண்மை #7
உருப்பெற்ற கருவிற்கு மூன்றாவது மாதத்தில் கைரேகைகள் வர ஆரம்பிக்கும்.
உண்மை #8
வயிற்றில் வளரும் குழந்தைக்கு கடைசியாக வளரும் உறுப்பு என்றால் அது கல்லீரல் தான்.
உண்மை #9
கருப்பையினுள் இருக்கும் பனிக்குடநீர் உண்மையில் நுண்ணுயிரற்ற தூய்மையான சிறுநீர் ஆகும்.
உண்மை #10
கர்ப்ப காலத்தில் கருப்பையின் அளவு மட்டுமின்றி, பெண்ணின் பாதமும், இதயத்தின் அளவும் அதிகரிக்கும்.