28 1364456478 eyebrow
கண்கள் பராமரிப்பு

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் என்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் இரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும்.

எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாகக் கிள்ளி விட வேண்டும்.

எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அது அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரவும் வழி செய்கிறது.

தினசரி குளிப்பதற்கு முன்பாகப் புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம். இதுவும் புருவங்கள் அழகாக உதவும்.

புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் கூடும்.

பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் சிலரது பழக்கம். அவசரத்திற்கு அவர்கள் அப்படிச் செய்வதுண்டு. இந்த முறை மிகமிக ஆபத்தானது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது ரொம்பவும் திக்காக கன்னாபின்னாவென வளரும்.

புருவங்கள் நரைத்திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் காய வைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐ ப்ரோ பென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது அழகாக, இயற்கையாக இருக்கும்.

கண்களுக்கு அடிக்கடி ஐ பேட் உபயோகிக்கலாம். கண்கள் குளிர்ச்சியாவதுடன், புருவங்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவும்.

புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி, யிலாங் யிலாங் மாதிரியான அரோமா எண்ணெய்கள்மிகச் சிறந்தவை. அவற்றை சூடு படுத்தாமல் அப்படியே மசாஜ் செய்ய உபயோகிக்கலாம்.
28 1364456478 eyebrow

Related posts

கண் கருவளையத்தை போக்கும் வெள்ளரி

nathan

அழகான கண் இமைகள் வேண்டுமா? இதை படியுங்கள்

nathan

கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய

nathan

கருவளையம் போக்கும் தெரப்பி

nathan

உங்களுக்கு தெரியுமா கண் புரை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய மருத்துவங்கள்!!

nathan

ஈர்க்கும் கண்களைப் பெறுவது எப்படி எனத் தெரியுமா?

nathan

உங்கள் புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா?

nathan

பிரமாதமான‌ கண்களை பெற‌ 5 சூப்பர் அழகுக் குறிப்புகள் … அதுவும் ஒப்பனை எதுவும் இல்லாமல்!

nathan

கண்களுக்க்கான க்ரீமை சரியான வழியில் உபயோகிப்பது எப்படி?

nathan