31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அசைவ வகைகள்ஆரோக்கிய உணவு

லாலி பாப் சிக்கன்

என்னென்ன தேவை?
லெக் பீஸ் – 12 பீஸ்
எலுமிச்சை – 2
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
சோள மாவு – 2 மேஜைக் கரண்டி
அரிசி மாவு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?
கோழி கால் துண்டுகளை (லெக் பீஸ்) சுத்தமாக கழுவி கத்தியால் ஆழமாக இரண்டு மூன்று கீரல்கள் போட்டு, ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து அதில் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் எலுமிச்சை சாற்றில் ஊறிய கோழி கால் துண்டுகளை எடுத்து நீரில் கழுவி தண்ணீரை வடிக்கவும். இதனுடன் சோளமாவு, உப்பு, மீதமுள்ள மற்றொரு எலுமிச்சை சாறு, சேர்த்து நன்கு பிசறவும்.

பிறகு மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாவில் ஊறிய கோழிக்கறி துண்டுகளை நன்கு வறுத்து எடுக்கவும். நல்ல எலுமிச்சையின் மனத்தில் குழந்தைகளுக்கு பிடித்த கோழிக்கறி லாலி பாப் தயார்.

Related posts

காரசாரமான சைடு டிஷ் மீன் மிளகு மசாலா

nathan

ஆரோக்கியமான, சத்தான கீரை உப்புமா

nathan

சுவையான இறால் குழம்பு செய்வது எப்படி?

nathan

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்!

nathan

உங்களுக்கு வெந்நீர் பருகுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றித் தெரியுமா?

nathan

சுவையான முருங்கைக்கீரை பொரியல்!! பாலூட்டும் பெண்கள் சாப்பிட..!

nathan

தெரிஞ்சிக்கங்க…பலா பழத்தை இப்படியெல்லாம் சாப்பிட்டால் ரொம்ப ஆபத்து?

nathan

தெரிஞ்சிக்கங்க…கால்சியம் மற்றும் வைட்டமின் டி உட்கொள்ளலை அதிகரிப்பதில் உதவக்கூடிய பரந்த அளவிலான உணவுகள்..!!!

nathan

ஹோம் மேட் மயோனைஸ்

nathan