சிலருக்கு மூக்கின் மேல் முள் போன்று, கரும்புள்ளிகள் இருக்கும். இது முக அழகையே கெடுப்பது போல மிகவும் அசிங்கமாக இருக்கும். இந்த முள் போன்ற கரும்புள்ளிகள் அதிகமாக பெண்களுக்குத்தான் காணப்படும். அவர்களின் முக அழகையே கெடுக்கும் மூக்கின் மேலிருக்கும் கரும்புள்ளிகளை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.
இலவங்கப்பட்டை நாம் உணவில் சேர்க்கக்கூடிய ஒரு பொருளாகும். இந்த இலவங்கபட்டையில் அதிகளவு ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. 2 தேக்கரண்டி பட்டை பொடியுடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேனும் கலந்து மூக்கில் அப்ளை செய்யுங்கள். பிறகு 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நம்முடைய முகத்தில் வரும் முள் போன்ற கரும்புள்ளிகள் மறைந்து ஒரு வாரத்திலேயே முகம் பளிச்சென்று தோன்றும்.
சமையல் சோடா மற்றும் ஓட்ஸ் சம அளவு எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்டாக்கி, இந்த பேஸ்டை கரும் புள்ளிகள் இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்து, மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.
பிறகு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் அதை கழுவி விடலாம். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் சீக்கிரமே மூக்கில் உள்ள முள் போன்ற கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவு பெறும். இதற்கு காரணம் பேக்கிங் சோடாவில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் தன்மை உள்ளது. இது ஸ்கின் பராமரிப்பிற்கு மிகவும் ஏற்றது.