ஒரு புதிய ஆய்வு, குறைப்பிரசவத்தில் பிறந்த சில குழந்தைகளுக்கு வயதுக்கு வந்தபின் பலவீனமான எலும்புகள் உருவாவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என்று கூறுகிறது. மேலும், இந்த ஆய்வு பிறக்கும் பொழுது குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற நோயால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் எனவும் தெரிவிக்கின்றது.
Does Low Birth Weight Cause Osteoporosis In Adulthood?
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது உண்மையில் உடையக்கூடிய மற்றும் பலவீனமான எலும்புகளை குறிக்கிறது. உண்மையில், கால்சியமானது கர்ப்ப கால இறுதிக் கட்டங்களில் தாயிடமிருந்து குழந்தைக்கு தொப்புள் கொடி மூலமாக செல்கின்றது. இது கருவின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது.
Does Low Birth Weight Cause Osteoporosis In Adulthood?
எனவே, முன்கூட்டியே பிறந்த ஒரு குழந்தைக்கு கால்சியம் பரிமாற்ற செயல்முறையில் பிரச்சனை ஏற்படுகின்றது. இது இறுதியாக உடையக்கூடிய எலும்பு பிரச்சனைக்கு வழிவகுக்கலாம்.
Does Low Birth Weight Cause Osteoporosis In Adulthood?
இந்த ஆய்வு ஒரு முன்கூட்டியே பிறந்த பல பெரியவர்கள் குறைந்த எலும்பு நிறைகளை கொண்டிருந்தார்கள் எனத் தெரிவிக்கின்றது. இது வெகு நிச்சயமாக ஆஸ்டியோபோரோசிஸ் நோயை தூண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் சாதாரணமாகப் பிறந்த பெரியவர்களின் எலும்பு நிறையை ஒப்பிடும் போது, அவர்கள் முன்கூட்டி பிறந்தவர்கள் மற்றும் அவர்களின் எலும்பு நிறை ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு இணைப்பை கண்டுபிடித்தார்கள்.
Does Low Birth Weight Cause Osteoporosis In Adulthood?
ஆய்வு இறுதியாக குறைப்பிரவசத்தில் பிறந்தவர்கள் அல்லது பிறக்கும் பொழுது எடை குறைவாகப் பிறந்தவர்கள், வயதாகும் பொழுது அவர்களுக்கு உடையக்கூடிய எலும்பு பிரச்சனை அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறது. 180 க்கும் மேற்பட்ட பெரியவர்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் வயது சுமார் 27 ஆண்டுகளாக இருந்தது.
Does Low Birth Weight Cause Osteoporosis In Adulthood?
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிலர் சாதாரண எடையுடன் பிறந்தனர், மேலும் சிலர் குறைந்த எடையுடன் பிறந்தவர்கள் ஆவார்கள். மேலும், அவர்கள் மத்தியில் முன்கூட்டியே குறைப்பிரவசத்தில் பிறந்த சிலரும் இருந்தனர்.
Does Low Birth Weight Cause Osteoporosis In Adulthood?
அவர்களின் அதிகமான எலும்பு நிறையை அளவிட்டு, அதை பிற தரவுகளுடன் ஒப்பிட்ட பிறகு, ஆராய்ச்சியாளர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்த மற்றும் குறைந்த எடையுடன் பிறந்தவர்கள் வயதிற்கு வரும் பொழுது அவர்களின் எலும்பு நிறை பாதிப்பிற்கு உள்ளாகின்றது எனத் தெரிவிக்கின்றார்கள்.