28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
095f5390b3
Other News

தெரிஞ்சிக்கங்க…பனங்கிழங்குவுடன் மிளகை உட்கொண்டால் ஏற்படும் அதிசயம் என்ன?

பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அந்த காலத்தில் கிராமங்களில் இதனை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும். சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சனை இருப்பவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மலக்கழிவை வெளியேற்ற இயலாமல் அதாவது மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் வெயிலில் காய வைத்த பனங்கிழங்கை (பச்சையாக) எடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஈரமாவு ஆக அரைத்து தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால் இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நன்கு வேகவைத்த கிழங்கின் மேல் தோல் பகுதியையும், நடுப்பகுதியில் உள்ள தும்பையும் நீக்கி சாப்பிட வேண்டும். மேலும், உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும். உடலுக்கு குளிர்ச்சித்தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கும். பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, வெயிலில் காய வைத்து, பின் அதை அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகமாகும்.

பனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. எனவே இதைச்சாப்பிட்டப் பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும். மற்றபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் உண்டாகும்.

Related posts

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் தெரிஞ்சிக்கங்க…

nathan

ஓரினச்சேர்க்கை : நண்பரை கழுத்தை நெரித்து கொ-லை

nathan

தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்

nathan

மகனை கொஞ்சி விளையாடும் நடிகை காஜல்

nathan

கர்ப்பப்பை சுத்தம் செய்வது எப்படி

nathan

இதை நீங்களே பாருங்க.! குழந்தையின் உயிரை பணயம் வைத்து நிஷா செய்த செயல் !!

nathan

முதல் வாரமே நாமினேஷனில் அதிக ஓட்டு வாங்கிய வனிதா மகள்..

nathan

பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ளப்போகும் 10 போட்டியாளர்கள்

nathan

5 ராசியினர்களுக்கு நாளை முதல் தலைவிதியே மாறப்போகிறது..

nathan