twist
உடல் பயிற்சி

தொப்பையை குறைக்க இலகுவான ரஸ்யன் ருவிஸ்ற் பயிற்சி

ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை. தொப்பையை குறைக்க தினமும் 20 நிமிடம் செலவழித்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்து, தலை, மேல் உடல் மற்றும் கால் தரையில் படாதவாறு உயர்த்திக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் விரல்களால் கோத்துக் கொள்ள வேண்டும்.

கைகளை வலது புறமாக அசைக்கும்போது, கழுத்தை இடது புறமாகவும், கைகளை இடது புறம் அசைக்கும்போது கழுத்தை வலது புறமாகவும் திருப்ப வேண்டும். கைகள், தலையைத் தவிர, உடலின் மற்ற எந்தப் பகுதியும் அசையக் கூடாது.

தினமும் 20 நிமிடம் செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்ய சற்று கடினமாக இருக்கும். ஆனால் இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது. தொப்பை கரைவதுடன் தொடைப் பகுதியில் உள்ள தேவையற்ற சதை நீங்கும். முதுகுத்தண்டு வலுவடையும்.
twist

Related posts

இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்யவேண்டாம்

nathan

7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைப்பதற்கான இலகுவான வழிமுறை : பின்பற்றி பயன்பெறுங்கள் !

nathan

தொடையில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கும் 4 ஆசனங்கள்

nathan

40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்

nathan

உடலை உறுதியாக்கும் தோப்பு கரணம்

nathan

நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது

nathan

சித்தர்கள் சொல்லி சென்ற 8 க்குள் ஒரு யோகா! அனைத்து நோய்களுக்கும் 21நாட்களில் தீர்வு! முயற்சி செய்து பாருங்கள்!

nathan

சுவிஸ் பால் பயிற்சி வயிறு, இடுப்பு சதையை குறைக்கும்

nathan

புதியவர்கள் செய்யும் வொர்க் அவுட் தவறுகள்

nathan