29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

முட்டை பணியாரம்!

தேவையானவை:

முட்டை – மூன்று, ஆச்சி சிக்கன் கபாப் மசாலா – ஒரு டீஸ்பூன், ஆச்சி கரம் மசாலா – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – சிறிதளவு, இஞ்சி – பூண்டு விழுது – அரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு, சின்ன வெங்காயம் – 7, பீன்ஸ் – 4, கேரட் – ஒன்று, பச்சைப் பட்டாணி – கால் கப், காலிஃப்ளவர் – சிறிதளவு, உருளைக்கிழங்கு (சிறியது) – ஒன்று, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

செய்முறை:

வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர் மற்றும் பச்சைப் பட்டாணியை சேர்த்துக் கிளறவும். இதனுடன் ஆச்சி சிக்கன் கபாப் மசாலா, ஆச்சி கரம் மசாலா, இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து… கொத்தமல்லித்தழை தூவி, எலுமிச்சைச் சாற்றை ஊற்றிக் கிளறி, கொஞ்சம் தண்ணீர் தெளித்து வேகவிடவும். வெந்த காய்கறி மசாலாவை, 5 நிமிடம் ஆறவிடவும். மூன்று முட்டைகளை பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும். பின்பு ஆறிய காய்கறி கலவையை முட்டையுடன் சேர்க்கவும். பணியாரக்கல்லின் குழிகளில் சிறிதளவு எண்ணெய் விட்டு, முட்டை – காய்கறி கலவையை ஊற்றி, பணியாரங்களாக சுட்டெடுக்கவும்.

Related posts

பிடி கொழுக்கட்டை

nathan

தினை இடியாப்பம்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லி

nathan

இந்த பனீர் பாப்கார்னை செய்து பாருங்கள்.

nathan

ராம் லட்டு

nathan

இனிப்பு பொங்கல் எப்படி செய்வது? இதோ….

nathan

பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ்

nathan

ப்ரெட் புட்டு

nathan

ஓட்ஸ் தேங்காய் தோசை

nathan