27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
moottuvali.2 jpg
மருத்துவ குறிப்பு

மூட்டுவலி

பொதுவாக மூட்டுவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
அதில் மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனை ஒரு காரணமாக உள்ளது.

இதனைக் குணப்படுத்தும் மருந்துகள் சித்த மருத்துவ
முறையினில் ஏராளமாக உள்ளது.

மருந்துகள் :
1 -முடக்கத்தான் கீரை இலை -2 கைபிடி அளவு எடுத்து இதனுடன் பூண்டு -2 பல்,மிளகு ,சீரகம் சிறிது,தக்காளி
ஒன்று,தண்ணீர் -2-டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்து
சூப் செய்து சாப்பிடவும்.
இது போல் வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு வலி எளிதில் குணமாகும்.

2 -வாயு சூரணம் :
சுக்கு -50 -கிராம்
மிளகு -50 -கிராம்
திப்பிலி -50 -கிராம்
சீரகம் -50 -கிராம்
ஏல அரிசி -25-கிராம்
இவைகளை லேசாக வறுத்து இடித்து பொடி செய்து
கொள்ளவும்.
இதில் காலை, மாலை -உணவிற்கு முன் கால் டீஸ்பூன் அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவும்.
உடலில் சகல வாயுப் பிரச்சனைகளும் தீரும்.பசி
நன்கு எடுக்கும்.மூட்டு வலி ,குதிக்கால் வலி தீரும்.

இதற்கு மேற் பிரயோகமாக முந்தய பதிவில் குறிப்பிட்ட
“வாத நாராயணன் தைலம்”செய்து தடவலாம்.
moottuvali.2+jpg

Related posts

எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் எடுப்பவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்…

nathan

வெந்தயம் – மருத்துவ குணங்கள்

nathan

பேச்சுலர்களே! உங்கள் வீடுகளை அழகாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

nathan

பெண்களிடம் மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்

nathan

கருத்தடை மாத்திரைகள் பாதுகாப்பானவையா?

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக பராமரிப்பு: இந்த ஊட்டமளிக்கும் சமையல் உங்கள் பீன்-வடிவ உறுப்புகளுக்கு சிறப்பாக செயல்பட உதவும்..!!!

nathan

நரம்புகள் பலம் பெற

nathan

நீண்ட நேரம் கணனி முன்பு அமர்ந்து வேலை செய்பவரா நீங்கள்?

nathan

மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்

nathan