தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரையும் இதயநோய் தாக்குகிறது.
இதற்கு முக்கிய காரணம் தவறான உணவுப்பழக்கம் தான்.
இவ்வளவு வயதானாலும் இதய நோய் வராமல் பாதுகாத்து கொள்ள சில உணவுகளை சாப்பிடலாம்
சால்மன்
சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 இரத்தம் உறைவதைத் தடுத்து, சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும். மேலும் இது இதய நோய்க்கு வழிவகுக்கும் ட்ரைக்ளிசரைடுகள் என்னும் ஒருவகை கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும். ஆகவே வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது சால்மன் மீனை உணவில் சேர்த்து வாருங்கள்.
வால்நட்ஸ்
ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், இதய நோயின் அபாயத்தை பாதியாக குறைக்கலாம். வால்நட்ஸில் நல்ல கொழுப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்புக்களுக்கு பதிலாக மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களை உட்கொண்டால், உடலில உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்.
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலை மற்றும் இதர பருப்பு வகைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த வகை நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். ஒருவேளை கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பீன்ஸ்களை வாங்குவதாக இருந்தால், அவற்றில் சோடியம் குறைவாக அல்லது உப்பு சேர்க்காததை வாங்குங்கள். ஏனெனில் சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
சொக்லேட்
கொக்கோ என்னும் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் சொக்லேட்டில், ப்ளேலோனால்கள் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்தம் உறைவதைத் தடுக்கவும் செய்யும். மேலும் இது ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட்டு, தமனிச் சுவர்களில் கெட்ட கொழுப்புக்கள் தேங்காமல், தமனியை சுத்தமாக வைத்திருக்கும்.
தக்காளி
தக்காளி கூட இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் உள்ள லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியமான சத்துக்களாகும்.