இன்று அநேகர் உடல் எடை அதிகமாகி அவதிப்பட்டுக்கொண்டு வருகின்றனர். இவர்கள் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவம் என பல செய்தாலும் அது அவ்வாறு பலனளிக்காமலேயே செல்கின்றது.
ஆனாலும் ஒருவரின் ரத்த பிரிவினை வைத்து உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது. ஆம் எந்த வகை ரத்த பிரிவினர் எவ்வாறான உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
ஏ இரத்த வகை
இரத்த வகைக்குரிய உணவு குறித்து வலைத்தளம் ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, ஏ வகை இரத்த பிரிவினர்கள் சைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் தூய்மையான, நற்பதமான உணவுகளை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பி இரத்த வகை
பி வகை இரத்தப் பிரிவினர்கள் பச்சை இலைக் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், முட்டைகள் மற்றும் ஆட்டிறைச்சி போன்ற குறிப்பிட்ட இறைச்சிகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம் இந்த வகை இரத்த பிரிவினர்கள் சோளம், கோதுமை, பருப்பு வகைகள், தக்காளி, வேர்க்கடலை, எள்ளு விதைகள் மற்றும் சிக்கன் போன்றவற்றைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
ஓ இரத்த வகை
ஓ வகை இரத்தப் பிரிவினர்கள் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளான இறைச்சிகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆனால் தானியங்கள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஏபி இரத்த வகை
ஏபி வகை இரத்த பிரிவினர்கள் டோஃபு, பால் பொருட்கள், பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் காப்ஃபைன், ஆல்கஹால் மற்றும் நெருப்பில் சுட்ட இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
முடிவு
அனைத்து வயதினருக்கும் சரியான அளவிலான ஆரோக்கியமான உணவுகள் மற்றும் அன்றாட உடற்பயிற்சி போன்றவை எடை இழப்பிற்கு மிகவும் முக்கியம். எடையை இழக்க நினைப்பவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள், வறுத்த மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.