ஆரோக்கியம்உடல் பயிற்சி

பெண்கள் எப்பொழுது வேண்டுமானலும் உடற்பயிற்சி செய்யலாமா

images (42)பெண்கள் சில உடல் உபாதைகள் இருக்கும் போது உடற்பயிற்சி செய்யக்கூடாது. அதிலும் மாதவிடாய்காலங்களில் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள். மாதவிடாயின் போது தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதை எதிர்க்கும் வல்லுனர்கள் கூட, நடை கொடுத்தால் ஆபத்து ஏற்படாது என்பதை ஒத்துக் கொண்டுள்ளனர்.

உங்களுக்கு ஜாக்கிங் செய்ய வேண்டும் என்று தோன்றினால் ஓடுங்கள். தீவிர இதய பயிற்சியில் ஈடுபடும் போது உங்கள் உடலில் இருந்து எண்டார்ஃபின்ஸ் சுரக்கும். மாதவிடாய் காலத்தில் உங்களுக்கு ஏற்படும் வலிகளுக்கு இது தீர்வாக அமையும். ஓடுவதற்கு முன்பும் பின்னும் அதிகளவில் தண்ணீர் குடித்து நீர்ச்சத்துடன் இருங்கள்.

யோகா என்பது பல வகைகளை கொண்டுள்ளது. உங்கள் திறன் அளவிற்கு தோதாக அமையும் ஆசனங்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மருத்துவ ரீதியாக ஆபத்து இல்லை என்றாலும் கூட, மாதவிடாய் காலத்தில் தலைகீழாக செய்யும் ஆசனங்களை தேர்ந்தெடுக்காதீர்கள்.

மாதவிடாயின் போது, ஏரோபிக்ஸ் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. அது உங்களை லேசாக வைத்திருக்கும். மேலும் ஏரோபிக்ஸ் வகுப்புகள் குறைந்த அழுத்தம் கொண்ட சுற்றுச் சூழலில் நடைபெறுவது கூடுதல் நன்மையை பயக்கும்.

பலகையை போல் தரையில் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகள் மற்றும் முழங்கையை நெஞ்சின் கீழ் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலை முழங்கை மற்றும் பாதமுனையின் உதவியை கொண்டு உயர்த்திடுங்கள். இது சற்று தீவிரமான உடற்பயிற்சியே.

இவ்வாறு நேரம் கிடைக்கும் போது செய்து வரலாம்.  உங்கள் தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் இருக்க மாதவிடாயை ஒரு காரணமாக பயன்படுத்தாதீர்கள். இருப்பினும் உங்கள் உடல் சொல்வது கேளுங்கள். அது எவ்வளவு தூரம் ஒத்துழைப்பு தருகிறதோ அந்தளவு உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

Related posts

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

nathan

சோளநாரில் உள்ள நன்மைகள் உங்களுக்கு தெரியுமா!……

sangika

இவை எத்தைனை நன்மைகளை தருகின்றன தெரியுமா?….

sangika

கறுப்பு நிற உள்ளாடை அணிந்தால் அறிவியல் ஆதாரம் இல்லாத பயமுறுத்தல்…..

nathan

வீட்டிலேயே நடைப்பயிற்சி

nathan

தொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள்

nathan

இதயத்தைக் காக்கும் காளான்

nathan

வயதானவர்கள் மெதுவாக உடற்பயிற்சி செய்யுங்க

nathan

வெண்டைக்காய் சாப்பிட்டால் நல்லா கணக்கு போடலாம்!

nathan