31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

அண்ணாச்சி செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை! ஸ்டைலா இப்படித்தான் கூப்பிடனுமாம்..

அண்ணாச்சி தற்போது தமிழ் திரையுலகில்வில் ஹீரோவாகவும் அவதரித்து விட்டார். இவருடைய வருகையை எதிர்பார்த்து ஏகப்பட்ட ரசிகன்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சென்ற பல வருடங்களுக்கு முன்பு விஷால் தலைமையில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட போகிறோம் என சொன்னபோது சரவணன் அருள் அண்ணாச்சி தன் பங்குக்கு கோடிகளை தூக்கி கொடுத்தார். அப்போதே அனைவரும் இவர் விரைவில் ஹீரோவாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று முணுமுணுத்தனர்.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து தன்னுடைய கடை விளம்பரத்தில் நடித்து வந்தார். அதை பார்த்துவிட்டு சமூகவலைதளங்களில், கடன் வாங்கியாவது உன் கடையில் துணி எடுத்து விடுகிறோம், தயவு செய்து விளம்பரம் நடிக்க வேண்டாம் என பல நெகடிவ் விமர்சனங்கள் வெளிவந்தன.

தற்போது அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்த விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் அண்ணாச்சி. அண்ணாச்சியின் விளம்பரப் படங்களை இயக்கிக் கொண்டிருந்த ஜேடி-ஜெர்ரி இணைந்து இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில்கூட அண்ணாச்சியின் புதிய பட புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தை கிடுகிடுவென நடுங்க வைத்தது குறிப்பிடத்தக்கது. மாஸில் அஜித்தும், கிளாஸில் விஜய்யும் கலந்த கலவை என சமூக வலைதளங்களில் போட்டி போட்டுக்கொண்டு அண்ணாச்சியின் புகைப்படங்களை பரப்பி வந்தனர்.

இந்நிலையில் அண்ணாச்சி தன்னுடைய வட்டாரங்களில் ஒரு புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம். இனிமேல் தன்னை யாரும் சரவணன் அருள் அண்ணாச்சி என அழைக்கக் கூடாது எனவும், சரவணன் அல்லது சரோ என்று கூப்பிட்டு கொள்ளுங்களேன் எனக் கூறுகிறாராம். 51 வயதில் ஹீரோவாகி அண்ணாச்சி செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்கிறார்கள் அவரது வட்டாரங்கள்

 

Related posts

சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்க இத செய்யுங்கள்!…

sangika

சுட்டெரிக்கும் வெயிலில் வறண்டு போன சருமத்தை பொலிவாக்குவது எப்படி?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

முயன்று பாருங்கள் முகப்பருவை போக்க இயற்கை முறையில் நிரந்தர தீர்வு

nathan

வெளிவந்த தகவல் ! 20 வயதில் 12 வயது மூத்தவருடன் தி ரும ணம்!! 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை கு ழந்தை பெற இதுதான் காரணம்.?

nathan

புருவ பராமரிப்பில் செய்யக் கூடாதவை

nathan

உங்களுக்கு வெள்ளையான சருமம் வேணும்னு ஆசையா? அப்ப இத படிங்க!..!

nathan

இவ்வாரு 5 வழிகளிலும் உங்கள் அழகை பராமரித்து வந்தால் உங்கள் வயதை யாராலும் கண்டுபிக்கமுடியாது.

nathan

காயம் ஏற்பட்டால் நாம் முதலில் தடவுவது தேங்காய் எண்ணெய்யை தான். தேங்காய் எண்ணெய் காயங்களை ஆற்றுவதோடு மட்டுமல்லாமல், அந்த காயங்களில் நீர் புகாமல் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.

nathan

நடிகர் அப்பாஸ் இப்போது என்ன செய்கிறார்? லீக்கான புகைப்படம்

nathan