தேவையான பொருட்கள்:
பச்சை வேர்க்கடலை – 1 கப் வெல்லம் – 1/2 கப்
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். எப்போது வேர்க்கடலையில் உள்ள தோல் தானாக வெளிவர ஆரம்பிக்கிறதோ, அப்போது அதனை இறக்கி, அதில் உள்ள தோலை நீக்கி விட வேண்டும். பின்னர் அதனை சிறிது நேரம் குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு
கொரகொரவென்று பொடி செய்து, அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து நன்கு 5 நிமிடம் நன்கு அடிக்க வேண்டும். பின்பு அதனை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு, அதனை உருண்டைகளாக பிடிக்க வேண்டும். இதில் நெய் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. வேர்க்கடலையிலேயே ஏற்கனவே எண்ணெய் இருப்பதால், சாதாரணமாக உருண்டைகளாகப் பிடிக்கலாம். இறுதியில் அதனை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் இதனை வைத்து சாப்பிடலாம்