33.3 C
Chennai
Saturday, May 18, 2024
gdgdg
முகப் பராமரிப்பு

முதுமையை தள்ளிப்போடும் தேங்காய் எண்ணெய் மசாஜ்

தேங்காய் எண்ணெயை, சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லதா என்ற கேள்வி பலரது மனதில் இருக்கும். உண்மையிலேயே தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற மிகவும் சிறப்பான ஓர் அழகுப் பராமரிப்பு பொருள். இதற்கு காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான்.

தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதில் காப்ரிக், காப்ரிலிக் மற்றும் லாரிக் ஆசிட் உள்ளது. இவை சருமத்தில் எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெயில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் புரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய்யை சருத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

இரவில் தூங்கும் முன் முகத்தில் உள்ள மேக்கப்பை நீக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதனால் மேக்கப் முழுவதும் நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும். உங்களுக்கு சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படுமாயின், தேங்காய் எண்ணெயை கைகளுக்கு தடவலாம். மேலும் தேங்காய் எண்ணெயை கைகளுக்குத் தடவினால், நீண்ட நேரம் சருமத்தில் ஈரப்பசை தங்கியிருக்கும். தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சையெதிர்ப்பு பொருள் உள்ளது.

எனவே தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். கால்களில் உள்ள முடியை நீக்கும் முன், தேங்காய் எண்ணெய் சருமத்தில் தடவிக் கொண்டு ஷேவிங் செய்தால், ஷேவிங் செய்த இடம் மென்மையாக இருப்பதோடு, முடியும் எளிதில் வெளிவரும். தினமும் தேங்காய் எண்ணெயைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, முதுமைத் தோற்றம் தள்ளிப் போடப்படும்.
gdgdg

Related posts

பளிச்’ முகத்திற்கு முத்தான சில யோசனைகள்!

nathan

பேஷியல் டிப்ஸ்

nathan

கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் உடனே மறைய

nathan

கரும்புள்ளியை போக்க வெங்காயமும் பூண்டும் போதும்!

nathan

வீட்டிலேயே ஒரு சில எளிய வழிமுறைகளில் கவனமாக ஒரு ஃபேசியல் எவ்வாறு செய்து கொள்வது

nathan

சன்னி லியோன் கவர்ச்சியாகவும், அழகாகவும் இருப்பதன் ரகசியம் இதாங்க…

nathan

கருப்பா பொலிவிழந்து இருக்கும் முகத்தை பிரகாசமாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்…

nathan

40 களில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சரும நல பழக்கங்களை இங்கே விவரிக்கிறோம்:

nathan

முகம் பளபளப்பாக மாற வேண்டுமா?

nathan