வெறும் உடற்பயிற்சி மட்டும் உடல் எடையை குறைக்க உதவாது. ஒவ்வொருவரது உடல் வாகுக்கு சார்ந்து அதற்கேற்ப உடற்பயிற்சியும், டயட்டும் பின்பற்ற வேண்டியது அவசியம். பெரும்பாலும் நிறைய பேருக்கு இதுபற்றி தெரிவதில்லை. இதனால் தான் பலர் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் உடல் பருமன் குறையாமல் இருக்கிறது.
சில உணவுகளின் காம்போ உடலில் கொழுப்பை அதிகரிக்க விடாமலும், கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது. உடல் எடை மட்டுமின்றி, இதய நலன், நோய் எதிர்ப்பு, உடல் வலிமை, என பலவற்றை ஊக்குவிக்க உதவுகிறது…..
இலவங்கப்பட்டை மற்றும் முழு தானியம்
இந்த காம்போ உடல் எடையை குறைக்கவும், உடல் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை குறைத்து உடல்நலத்தை மேலோங்க வைக்கிறது. மற்றும் அதிகமான பசியையும் இது குறைக்கிறது. அமெரிக்க ஊட்டச்சத்து ஆய்வகத்தின் ஓர் ஆய்வறிக்கையில் இலவங்கப்பட்டை உடல் எடையை குறைக்கவும், இரத்த சர்க்கரையை குறைக்கவும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. முழு தானிய உணவுகள் செரிமானத்தை சரி செய்து உடல் சக்தியை ஊக்குவிக்கிறது.
கிரீன் டீ
மற்றும் மிளகு இடை பகுதியில் இருக்கும் கொழுப்பை கரைக்க இவை உதவுகிறது. ஏறத்தாழ 130% அதிகமாக இவை கலோரிகளை கரைக்க உதவுகிறதாம். பசியின்மை சார்ந்த பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வளிக்கிறது.
மிளகு மற்றும் கருப்பு பீன்ஸ்
இந்த காம்போ உங்களது நோய் எதிர்ப்பு மணடலத்தை உறுதியாக்க உதவுகிறது. மிளகில் இருக்கும் இரும்புச்சத்து உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்கிறது. மற்றும் கருப்பு பீன்ஸ் உணவில் இருக்கும் இரும்பு, உயர்ரக வைட்டமின் சி போன்றவை உடல் வலுவை ஊக்குவிக்கிறது. ஆனால் இந்த இரண்டையும் உணவில் சரியான முறையில் சேர்க்க வேண்டியது அவசியம்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் தக்காளி
இந்த இரண்டு உணவுகளும் நோய் தாக்கம் ஏற்படாமல் உடலை பாதுகாக்க உதவுகிறது. தக்காளியில் இருக்கும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின் ஈ மற்றும் சி இதயத்தை பாதுகாக்கிறது, நோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. மற்றும் ஆலிவ் எண்ணெய் கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் இருக்க உதவுகிறது. இதனால் உடல் எடை மற்றும் இதய கோளாறுகள் சார்ந்த பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கக் முடியும்.
ப்ரோக்கோலி மற்றும் தக்காளி
இவ்விரண்டு உணவுகளும் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ப்ரோக்கோலி மற்றும் தக்காளி புற்றுநோயை எதிர்த்து போராடும் சிறந்த உணவுகளாக கருதப்படுகிறது. புற்றுநோய் கட்டிகளின் வளரும் வேகத்தை இவை இரண்டு வெகுவாக தடுக்கிறது. இதை சமைத்தும் சாப்பிடலாம், வேக வைத்தும் சாப்பிடலாம்.
ஓட்ஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி
இந்த இரண்டு உணவுகளும் இதய நலனை பாதுகாக்க உதவுகிறது. ஓட்ஸ் உணவில் தீயக் கொழுப்பை கரைக்கும் மூலப்பொருள் இருக்கிறது. இது மாரடைப்பு மற்றும் உடல்பருமன் ஏற்படாமல் தடுக்கிறது.
கிரீன் டீ மற்றும் எலுமிச்சை
இதய நலனை ஊக்குவிக்கும் மற்றுமொரு சிறந்த காம்போ கிரீன் டீயும், எலுமிச்சையும். கிரீன் டீயில் சக்திமிக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இருக்கிறது. இது இதய நலனை வலுவாக்க உதவுகிறது. இதோடு எலுமிச்சை சேர்த்து பருகும் போது உங்களுக்கு 80% “Catechins” எனப்படும் சக்திமிக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் கிடைக்கிறது. நண்பகல், மாலை வேளைகளில் சிறுதீனி உட்கொள்வதற்கு பதிலாக இதை பருகலாம்.
பூண்டு மற்றும் வெங்காயம்
முழு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் வலிமையை அதிகரிக்க செய்கிறது இந்த இரண்டு உணவுப் பொருட்களும். மற்றும் இவைஇதய நலனையும் பாதுகாக்கிறது.