27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
625.500.560.350.160.300.053.800 7
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா சீரகத்தை இதெல்லாம் உடன் கலந்து சாப்பிட்டால் போதும்.. பல நோய்களுக்கு மருந்தாகுமாம்..!

சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும். சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.

சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும். சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.

சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும். சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.

நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சிசேசரியன் செய்ததால் தாய்ப்பால் பற்றாக்குறையா?

nathan

மழைக் காலத்தில் ஏற்படும் சளித் தொல்லைக்கு விரைவில் தீர்வுக் காண உதவும் பாட்டி வைத்தியங்கள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஞாபக மறதி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

காலையில் எழுந்ததுமே சோர்வா இருக்கா..?

nathan

மூக்குக் கண்ணாடியை எத்தனை மாதங்கள் வரை பயன்படுத்தலாம்

nathan

ஆண்கள் மனைவியை ஏமாற்றி சின்னவீடு வைத்து கொள்ள காரணம்

nathan

எடைக்குறைப்பு எப்படி உங்கள் சர்க்கரை நோயில் இருந்து எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?

nathan

அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி தீர்வளிக்கும் சீரகம்!!!

nathan