நீர்க்கட்டிகள் என்று சொல்லப்படுகிற பி.சி.ஒ.டி ஒரு குறைபாடே தவிர, நோய் அல்ல. பரபரப்பு நிறைந்த இயந்திரத்தரமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், உடலுழைப்பு குறைவு, ஹார்மோன்களின் சீரற்ற செயல்பாடு, மரபியல் காரணம், எதிர்பாற்றல் குறைதல் போன்ற காரணத்தால் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.
எல்லாப் பெண்களுக்கும் 15 நீர்க்கட்டிகள் வரை உருவாகலாம். அவை மாதவிலக்கு சமயத்தில் மறைந்துவிடும். இது இயல்பான செயல்பாடுதான். மாதவிலக்கு சுழற்சி தடைப்பட்டு ஃபைப்ராய்டு, சிஸ்ட் போன்ற பெரிய அளவிலான பாதிப்புகளாக உருமாறினால் மட்டுமே இதற்கு சிகிச்சை எடுப்பது அவசியம்.
லேசான தலைவலி, காய்ச்சல், சளி, அசதி, வயிற்று வலி போன்ற சிறு உபாதைகளுக்கெல்லாம் மாத்திரைகளை சாப்பிடும் பழக்கத்தை நிறுத்தலாம். வலியை ஏற்கப் பழகுதல் நல்லது. தலைவலிக்கு வெற்றிலை வைத்துக் கொள்ளுதல், சளி தொல்லைக்கு ஆவி பிடித்தல் என முடிந்தளவு எளிய வெளிப்புற சிகிச்சைகளை செய்துகொள்தல் நலம். மருத்துவ ஆலோசனையுடன், அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே ஹார்மோன் மாத்திரைகளை எடுக்கலாம். அதிலும் இரண்டாவது முறையாக, வேறொரு மருத்துவரிடம் கருத்து கேட்க வேண்டியது அவசியம்.
என்ன தீர்வு?
துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
சரியான நேரத்தில் சாப்பிடுவதால்கூட, வரும் நோயை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.
போதுமான அளவு தண்ணீர், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீர்க் கட்டிகளை குணப்படுத்த, கற்றாழையின் தோல் சீவி அதன் சதைப் பகுதியை 7 முறை ஒடும் தண்ணீரில் (running tap water) கழுவி, அதன் சதைப் பகுதியை மோரில் நன்கு அடித்து குடிக்கலாம். பனை வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, கர்ப்பப்பை பிரச்னைகள் குணமாகும்.