31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
சிற்றுண்டி வகைகள்

கருப்பட்டி இட்லி

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி – 2 கப்,
உளுத்தம்பருப்பு – அரை கப்,
தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப்,
ஏலக்காய்தூள் (விருப்பப்பட்டால்) – அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – கால் கப்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
ஆப்பசோடா – ஒரு சிட்டிகை.

செய்முறை:

• அரிசி, உளுந்தை தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

• உளுந்தை பொங்கப் பொங்கவும், அரிசியை நைசாகவும் அரைத்து, துளி உப்பு சேர்த்துப் புளிக்கவையுங்கள்.

• புளித்த மாவில், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலக்குங்கள்.

• கருப்பட்டியை கால் கப் தண்ணீர் வைத்துக் கரையவிட்டு, வடிகட்டி, சூடாக அப்படியே மாவில் சேருங்கள்.

• இதை நன்கு கலந்து கொள்ளவும். இட்லி சட்டியை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் இட்லி தட்டில் மாவை ஊற்றி வேகவைத்தெடுங்கள்.

• மிகவும் சுவையான சத்தான கருப்பட்டி இட்லி இது.

குறிப்பு: மாவு அரைக்கும்போது, கெட்டியாக இருக்கவேண்டும். ஏனெனில், கருப்பட்டிப் பாகு சேர்த்ததும் மாவு நீர்த்துக்கொள்ளும்.

Related posts

சுவையான சத்தான முடக்கத்தான் கீரை அடை

nathan

வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா தோசை!

nathan

தேங்காய்-ரவா புட்டு

nathan

மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்

nathan

ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ்

nathan

சுவையான ரச வடை செய்வது எப்படி…

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் சீஸ் – கார்ன் கச்சோரி

nathan

புத்தாண்டு புது விருந்து: பச்சைப் பயறு வடை

nathan

தக்காளி – கார்ன் புலாவ்

nathan