காலையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சனையில் ஒன்று தங்களின் முடியை சரிசெய்வது. சிலருக்கு தூங்கி எழுந்ததனால், முடி அடங்காமல், அங்கும் இங்குமாக தூக்கி வளைந்துக் கொண்டிருக்கும். இன்னும் சிலருக்கோ தலையில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தலைக்கு குளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் அதற்கு நேரம் இருக்காது.
நீங்கள் இப்பிரச்சனைகளை சந்தித்தால், இதோ சில அற்புதமான வழிகளை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை செய்தால், பிரச்சனைகளைப் போக்கலாம். குறிப்பாக இவை அவசரத்திற்கு உதவும் ஓர் அற்புத டிப்ஸ். தலைக்கு குளிக்க சோம்பேறித்தனப்பட்டு, இதையே வாரம் முழுக்க செய்யாதீர்கள்.
ஹாட் ஹேர் ஸ்டைல்
பெண்களே உங்கள் கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாகவோ அல்லது நீங்கள் விரும்பிய ஹேர் ஸ்டைல் போட முடியாத அளவில் இருந்தாலோ, வித்தியாசமாக மெஸ்ஸி கொண்டை, ஃபிஷ் டெயில் போன்றவற்றைப் பின்பற்றலாம்.
பேபி பவுடர்
உங்கள் தலைமுடி அதிக எண்ணெய் பசையுடன் இருந்தால், பேபி பவுடரை கையில் எடுத்து, முடியில் தேய்த்துவிடுங்கள். இதனால் பேபி பவுடரானது தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கிவிடும்.
ஆல்கஹால்
ஆல்கஹால் கூட உங்கள் தலைமுடியை சிறப்பாக வெளிக்காட்ட உதவும். அதற்கு ஆல்கஹாலை நீரில் கலந்து. விரல்களில் நனைத்து, ஸ்கால்ப்பில் படாதவாறு வெறும் கூந்தலில் மட்டும் படுமாறு தடவுங்கள். ஸ்கால்ப்பில் பட்டால், ஸ்கால்ப் எரிய ஆரம்பிக்கும். எனவே கவனமாக இருங்கள்.
ஆப்பிள் சீடர்
வினிகர் ஆப்பள் சீடர் வினிகர் பல விஷயங்களைச் செய்ய உதவுகிறது. அதில் ஒன்று உங்கள் முடியை சிறப்பாக வெளிக்காட்ட உதவுவது. அதற்கு இதனை விரல்களில் நனைத்து, கூந்தலில் தடவ வேண்டும். இதனால் முடி சிறப்பாக காணப்படுவதோடு, நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அந்த கலவையை விரல்களில் நனைத்து முடியில் மட்டும் தடவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முடி நல்ல நறுமணத்துடன் சிறப்பாக இருக்கும்.
சீப்பை பயன்படுத்தாதீர்
முக்கியமாக உங்கள் முடி காலையில் சிறப்பாக இல்லாவிட்டால், சீப்பு பயன்படுத்தாதீர்கள். இதனால் ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் முடியில் பட்டு, முடிகளும் எண்ணெய் பசையுடன் திரித் திரியாக காட்சியளிக்கும்.