தற்போதைய காலத்தில் திருமணமான பின்னர் உடனே குழந்தைப் பெற்றுக் கொள்ள பல தம்பதியினர் விரும்புவதில்லை. அதற்காக அவர்கள் தங்களின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக கொண்டு உறவில் ஈடுபடாமலும் இருப்பதில்லை. மாறாக அப்படி உறவில் ஈடுபடும் போது கருத்தரிக்காமல் இருப்பதற்கு, பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.
இருப்பினும் சில நேரங்களில் அந்த கருத்தடை மாத்திரை சரியாக வேலை செய்யாமல் போவதால், எதிர்பாராதவிதமாக கருத்தரிக்க நேரிடுகிறது. அப்படி கருத்தடை மாத்திரைகளை எடுக்கும் போது கருத்தரித்து இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மனநிலை மாற்றம்
மனநிலை மாற்றம்
கருத்தடை மாத்திரைகளை எடுக்கும் போது, திடீரென்று உங்கள் உடல் மற்றும் மூளையில் ஒருசில ஹார்மோன்களின் அளவு அதிகரித்து, மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டிருந்தால், அது கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
மாதவிடாய் தாமதமாதல்
கருத்தடை மாத்திரை எடுக்கும் போது, திடீரென்று மாதவிடாய் சுழற்சி தாமதமானாலோ அல்லது மாதவிடாய் சுழற்சி ஏற்படாமல் இருந்தாலோ, அதுவும் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதைக் குறிக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
திடீரென்று அடிக்கடி சிறுநீர் கழிக்க ஆரம்பித்தால், கருப்பையில் கருமுட்டை தங்கி பெரிதாகி, சிறுநீர்ப்பையை அழுத்துகிறது என்று அர்த்தம். எனவே இத்தகைய அறிகுறியை சாதாரணமாக நினைக்காதீர்கள்.
மார்பகங்கள் வீக்கமடைதல்
கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கும் போது, மார்பகங்களில் வலி எடுக்க ஆரம்பித்தாலோ அல்லது மார்பங்கள் வீக்கமாக இருப்பது போல் உணர்ந்தாலோ, அதுவும் வயிற்றில் கரு உருவாகியுள்ளதை வெளிப்படுத்தும்.
உணவுகளின் மீது ஆசை எழுதல்
பொதுவாக ஹார்மோன் மாற்றம் அல்லது கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். அப்படி உங்களுக்கு திடீரென்று உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்தால், அதுவும் ஊறுகாய், புளிப்பான உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகரித்தால், அது கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தும்.