25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
hair loss
தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலை வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

பொதுவாகப் பெண்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறு முடி பிரச்சனைகளில் ஒன்று தான் பெண்களின் தலை வழுக்கைப் பிரச்சனை. தலைச் சருமத்தின் மேற்புறத்தில் ஃபோலிகிள் எனப்படும் சிறு துவாரங்களில் மயிர்கால்கள் நிற்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. காலம் செல்லச் செல்ல இந்தத் துவாரங்கள் குறுகி, மெதுவாக வழுக்கை உண்டாகிறது.

எனவே நீளமாக தடிமனாக இருந்த முடி குட்டையாகவும், மெலிதாகவும் மாறுகிறது. மெதுவாக இந்த மெல்லிய முடி தலை சருமத்தை வெளிக்காட்டி வழுக்கையை அதிகரிக்கிறது. இந்த மயிர்க்கால் துவாரங்கள் புதிய முடியை உருவாக்க இயலாத அளவிற்கு மிகவும் பலவீனமடைந்து விடுகின்றன. பெண்களுக்கு ஏற்படும் இந்த வழுக்கைப் பிரச்சனையானது தலை வகிடுகளில் மெதுவாகத் துவங்கும். இதனிடையே தலை முழுவதும் ஆங்காங்கே முடி கொட்டுதலும் அதிகரிக்கும்.

பெண்களுக்கு வழுக்கைப் பிரச்சனை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:

* பரம்பரை அல்லது பெண்களின் குடும்ப வழி வந்த வழுக்கை

* வயது முதிர்தல்

* அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள்

* மாதவிடாய் நிறுத்தம்

இதுப்போன்ற வழுக்கைப் பிரச்சனைக்கு ஒரு நல்ல சரும சிகிச்சை நிபுணரை அணுகி இதற்கான காரணங்களை ஆராய்ந்து ஆலோசனைப் பெற்று அதற்குத் தகுந்த சிகிச்சையை பெற வேண்டும். இந்தத் துறையில் நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவர் அல்லது ஆலோசகரைப் பார்ப்பதும் சரியாக இருக்கும். இவ்வகை வழுக்கை ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரிடமும் இருந்தாலும், வழுக்கைத் துவங்கும் இடம் இருவருக்கும் வேறுபடும். ஆண்களுக்கு உச்சந்தலையிலும், பெண்களுக்கு வகிடு எடுக்கும் இடத்திலும் வழுக்கை விழத் தொடங்கும். இது தொடர்ந்த பரவலான முடி உதிர்விற்கும் வழிவகுக்கும். இந்த முடி உதிர்வினால் நீங்கள் மன நெருக்கடிகளுக்கும் உள்ளாக நேரிடலாம்.

சரி, இதற்கான சிகிச்சைகள் என்னென்ன?

1. முடியைப் பிரிக்கும் பெர்ம் எனப்படும் சிகிச்சை, லோஷன்கள் மற்றும் பிற அழகுப் பொருட்களை உபயோகித்து உங்கள் முடியை அடர்த்தியாகவும் பரவலாகவும் காட்டலாம்.

2. இதெற்கென பிரத்தியேகமாக உள்ள தேர்ச்சி பெற்ற நிபுணர்களிடம் ஆலோசனையை தொடர்ந்து பெற்று வழுக்கையை தவிர்க்க சிகிச்சை செய்து கொள்ளலாம்.

3. முடிகளை சேர்த்தல் முறை மூலம் அதிகப்படுத்த முயற்சி செய்யலாம். இது முடி பரவலை இயற்கையாகக் காட்டும். நீங்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நிபுணரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுங்கள்.

4. முடி மாற்று அறுவை சிகிச்சை வழுக்கைக்கு வேறொரு வழியாகும். புதிய நவீன சிகிச்சைகள் மிகவும் மேம்பட்டவைகளாக இருப்பதுடன் நல்ல பலன் தருவதாக உள்ளன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

உங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

nathan

தினமும் தலை முடியை அலசுபவர்களா நீங்கள்? பல பக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்

nathan

முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…

nathan

கூந்தல் சிகிச்சை ஒரு எச்சரிக்கை

nathan

இளநரையை கருமையாக மாற்றும் இயற்கை மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

nathan

இதை முயன்று பாருங்கள் வீட்டுலே உங்க முடியை ஸ்ட்ரைட்னிங் பண்ணலாம் பால் இருந்தா போதும்

nathan

முடி வளர…. பாட்டி மருத்துவம் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இரு மடங்கு அடர்த்தியான கூந்தல் கிடைக்கனுமா? இதை ட்ரை பண்ணுங்க!!

nathan