25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
23 whisky
முகப்பரு

முகத்தில் பரு அதிகம் இருக்கா? அப்ப விஸ்கி ஃபேஸ் பேக் போடுங்க…

முகத்தில் பரு அதிகம் இருக்கா? அப்ப விஸ்கி ஃபேஸ் பேக் போடுங்க…

பரு முகத்தின் அழகைக் கெடுப்பதோடு, கடுமையான வலியையும் உண்டாக்கும். இதனைப் போக்க பலரும் கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த பருக்களைப் போக்க ஆல்கஹால் பயன்படும். ஏனெனில் ஆல்கஹாலில் பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களைப் போக்கும் பொருட்கள் உள்ளது. எனவே ஆல்கஹாலில் ஒன்றாக விஸ்கியைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சீக்கிரம் பருக்களைப் போக்கலாம். குறிப்பாக சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு விஸ்கி சற்று எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே சென்சிடிவ் சருமத்தினர் விஸ்கியை நீரில் கலந்து பயன்படுத்தலாம். ADVERTISEMENT சரி, இப்போது முகப்பருக்களைப் போக்க உதவும் விஸ்கி ஃபேஸ் பேக்குகளைப் பார்ப்போமா!!!

எலுமிச்சையுடன்… ஒரு எலுமிச்சையைக் பிழிந்து சாறு எடுத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் விஸ்கியை சேர்த்து கலந்து, பஞ்சு பயன்படுத்தி முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், ஒரே வாரத்தில் பருக்கள் மறைந்து, முகம் பொலிவோடு இருப்பதைக் காணலாம்.

முட்டை வெள்ளைக்கருவுடன்… 1 டேபிள் ஸ்பூன் விஸ்கியுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தாலும், பருக்களை விரைவில் மறையும்.

தேனுடன்… பொதுவாக தேன் சரும பிரச்சனைகளைப் போக்க உதவும். அதிலும் அந்த தேனில் சிறிது விஸ்கி சேர்த்து கலந்து, ஃபேஸ் பேக் போட்டால், நல்ல பலனைப் பெறலாம்.

க்ரீன் டீயுடன்… க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இது பருக்களால் சரும செல்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களைத் தடுக்கும். அத்தகைய க்ரீன் டீயை, 1 டேபிள் ஸ்பூன் விஸ்கியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவினால், பருக்கள் சீக்கிரம் போய்விடும்.

உப்புடன்… 1 டேபிள் ஸ்பூன் உப்பில், 2 டேபிள் ஸ்பூன் விஸ்கி சேர்த்து கலந்து, உப்பு கரைவதற்குள் முகத்தில் தடவி, சிறிது நேரம் உலர வைத்து, பின் கழுவ, பருக்கள் மட்டுமின்றி, கரும்புள்ளிகளும் மறையும்.

பாலுடன்… பால் பல்வேறு சரும பிரச்சனைகளை சரிசெய்ய உதவும். ஆனால் அந்த பாலை விஸ்கியுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவினால் பருக்கள் மட்டுமின்றி, அதனால் ஏற்பட்ட தழும்புகளும் போய்விடும்.

தயிருடன்… தயிரை நேரடியாக முகத்தில் தடவி உலர வைத்து, நீரில் கழுவி, சருமம் உலர்ந்ததும், விஸ்கியால் முகத்தை துடைத்து சிறிது நேரம் உலர வைக்க வேண்டும். இப்படி அரை மணிநேரம் கழித்து மீண்டும் இம்முறையை செய்ய வேண்டும். இதனால் பருக்கள் நீங்குவதோடு, முகப்பொலிவும் அதிகரிக்கும்.23 whisky

Related posts

முகப்பருக்கள் வருவதை தடுக்கும் ஆயுர்வேத வழிகள்

nathan

முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்!

nathan

முக பருவை போக்க..

nathan

ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?

nathan

பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை

nathan

எண்ணெய் பசை சருமத்தை அதிகம் பாதிக்கும் முகப்பரு – தடுக்கும் வழிகள்

nathan

மருக்கள் மறைய முகம் பொழிவு பெற சூப்பர் டிப்ஸ்

nathan

பாவக்காய் உங்க முகப்பருக்களை குணப்படுத்தி சூப்பரான ஸ்கின் டோன் தரும்! எப்படி தெரியுமா?

nathan

Beauty tips.. முகப்பருவை போக்க சில டிப்ஸ்!

nathan