25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
18 preg
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் சாப்பிடத் தோன்றும் உணவுகள்!!!

பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஒருசில உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்கும். மேலும் ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கும் அது வேறுபடும். அதில் ஒருசிலருக்கு இனிப்பான உணவுகளும், சிலருக்கு உப்பு அதிகம் இருக்கும் உணவுகளும் மற்றும் சிலருக்கு புளிப்புமிக்க உணவுகளும் சாப்பிட விருப்பமாக இருக்கும். ஆனால் இப்படி கர்ப்பிணிகளுக்கு சாப்பிட தோன்றும் உணவுகளைக் கொண்டும் என்ன குழந்தை வயிற்றில் வளர்கிறது என்பதை கணிக்க முடியும் என்பது தெரியுமா?

ஆம், நம் நாட்டில் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று பரிசோதித்துபப் பார்ப்பது பெருங்குற்றம். ஏனெனில் சிலர் பெண் குழந்தை வயிற்றில் இருந்தால், கருச்சிதைவு செய்துவிடுகின்றனர். எனவே இந்திய அரசாங்கமானது இதனை தடை செய்துவிட்டது. ஆனால் நம் முன்னோர்கள் அக்காலத்தில் கர்ப்பிணிகளின் ஒருசில செயல்களை வைத்து, வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள்.

அதில் ஒன்று தான் அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்கள். இவற்றிற்கு எவ்வித அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை. இருப்பினும் பலருக்கு இந்த வகையான கணிப்பு சரியானதாக உள்ளது. இங்கு வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் சாப்பிடத் தோன்றும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

புளிப்பு

புளிப்பாக இருக்கும் உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், வயிற்றில் ஆண் குழந்தை இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.

உப்பு

கர்ப்பிணிகளுக்கு இனிப்பான உணவுகளைப் பார்த்து அதிக ஆசை எழுந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்றும், அதுவே உப்புமிக்க உணவுகளின் மீது ஆசை அதிகம் இருந்தால், இது ஆண் குழந்தை என்றும் ஒருசில நம்பிக்கை உள்ளது.

காரம்

இதுவரை காரமான உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தவர்கள், திடீரென்று கர்ப்ப காலத்தில் காரமான உணவுகளை அதிகம் உட்கொள்ள ஆசைப்பட்டால், அதுவும் ஆண் குழந்தை உள்ளது என்பதை சுட்டிக் காட்டும். வேண்டுமானால் ஆண் குழந்தை பெற்ற தாய்மார்களை கேட்டுப் பாருங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சையைப் பார்த்ததும் அதை உடனே ருசித்தாக வேண்டுமென்ற எண்ணம் எழுகிறதா? அப்படியென்றால் உங்கள் வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் அனுபவமிக்க தாய்மார்களிடம் கேட்டால், இதை சொல்வார்கள்.

இறைச்சி

கர்ப்ப காலத்தில் அசைவ உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், அதுவும் ஆண் குழந்தை வயிற்றில் வளர்ந்து வருகிறது என்று கருதப்படுகிறது.

ஊறுகாய்

சில ஆண் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஊறுகாய் பார்த்தாலே அதை அள்ளி சாப்பிட வேண்டுமென்று தோன்றும். ஏனெனில் அதில் உப்பு, காரம், புளிப்பு போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.

ஆரஞ்சு

நிறைய கர்ப்பிணிகளுக்கு ஆரஞ்சு பழத்தின் மீது விருப்பம் அதிகம் இருக்கும். இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாவிட்டாலும், பல பெண்கள் இந்த அனுபவத்தைப் பெற்றுள்ளதாக சொல்கின்றனர்.

இவையே வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் சாப்பிடத் தோன்றும் உணவுகள். நீங்கள் வேறு ஏதாவது அனுபவத்தைப் பெற்றிருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணி பெண்கள் வெளிக்கூற தயங்கும் விஷயங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

nathan

உங்கள் கவனத்துக்கு அடிக்கடி மேல் வயிறு வலி வருகிறதா. ?கண்டிப்பாக வாசியுங்க….

nathan

கருத் தரிக் க மு யலும் போது, கணவன்மார்கள் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! பாத மசாஜ் மூலம் கிடைக்கும் பலன்கள்

nathan

பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கட்டாயம்

nathan

பெண்கள் தாம்பத்தியத்திற்கு மெனோபாஸ் முற்றுப்புள்ளியா?

nathan

வாடகைத் தாய் மற்றும் சோதனைக் குழாய்கள் – குழந்தை பெற சிறந்த வழி எது?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதும் புற்றுநோயை வராமல் தடுக்க முடியும்!

nathan