26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
cover
முகப் பராமரிப்பு

பெண்களே பொலிவான சருமத்துடன் இளமையாக இருக்க இத ட்ரை பண்ணுங்க!

இப்பொழுது உங்கள் கையில் ஒரு டைம் மெஷின் இருந்தால் என்ன செய்வீர்கள். போன இளமையை கொண்டு வர முயல்வீர்கள் அல்லவா. உங்கள் இளமைக் காலத்திற்கு செல்ல நினைப்பீர்கள் அல்லவா. ஆணோ பெண்ணோ 30 வயது ஆனதும் தங்களது அழகை பராமரிக்க தவறி விடுகிறார்கள். இதன் விளைவு நரைத்த முடி, சுருக்கங்கள், சரும தொய்வு போன்றவை ஏற்பட காரணமாக அமைகிறது. இது உங்களுக்கு வயதாகுவதை வெளிப்படுத்தி விடுகிறது.

சருமம்

வயதாகுவது என்பது அழகு சார்ந்தது மட்டும் கிடையாது. அது உடல் ஆரோக்கியத்தையும் சார்ந்தது. உடலுக்கு தேவையான ஊட்டத்துக்கள் கிடைத்து மற்றும் உடலின் மெட்டா பாலிசத்தை சரி செய்தாலே போதும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். ஆக்ஸிஜன் நிறைந்த சுத்தமான இரத்தம் உடலில் இருந்தால் போதும் எல்லா உள்ளுறுப்புகள் மற்றும் சருமம் எல்லாம் ஆரோக்கியமாக செயல்படும். இதன்மூலம் நாம் சீக்கிரம் வயதாகாமல் இருக்கலாம்.

இதற்கு நீங்கள் நிறைய வேலைகள் செய்யனும்னு அவசியமில்லை. உங்கள் சமையலறை பொருட்களை கொண்டே உங்கள் அழகை மேம்படுத்தலாம். இளமையான பொலிவான சருமத்தையும் பெற முடியும்.

சரி வாங்க வயதாகுவதை தடுத்து இளமையை திருப்பித் தரும் வீட்டு முறைகளை பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1 தேன்
1 தேன்
வயதாகுவதை தடுப்பதில் தேன் ஒரு சிறந்த பொருளாக செயல்படுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வயதாகுவதை தடுக்கும் இயற்கை கெமிக்கல்கள் போன்றவை இவற்றில் உள்ளன. இவை ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகவும் செயல்படுகிறது. ஏன் நூறு வருடங்கள் ஆனாலும் பாட்டிலில் உள்ள தேன் கெட்டு போகாமல் அப்படியே இருக்கும். உங்கள் இளமையை பெற தேனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

1/2 டீ ஸ்பூன் சுத்தமான தேன்

செய்முறை

தேனை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும்

20 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்

இதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்ற விதத்தில் செய்தால் நல்ல பலனை காணலாம்.

2 ரோஸ் வாட்டர் பேக்

2 ரோஸ் வாட்டர் பேக்
சரும துளைகள் திறந்து இருந்தால் இயற்கையாகவே முகத்திற்கு பொலிவு கிடைக்கும். எனவே மூடியுள்ள சரும துளைகளை சரி செய்ய ரோஸ் வாட்டர் பயன்படுகிறது. இவற்றில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் என்ற பொருள் நமது சருமத்திற்குள் சென்று துளைகளில் உள்ள தூசிகள் மற்றும் மாசுக்களை நீக்குகிறது. மேலும் கண்களுக்கு கீழே உள்ள வீக்கத்தையும் குறைக்கிறது.

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்

1/2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்

3-4 சொட்டுகள் கிளிசரின்

1 காட்டன் பஞ்சு

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து கொள்ளவும்

காட்டன் பஞ்சை இந்த கலவையில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு உடனடியாக முகத்தை கழுவக் கூடாது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு பயன்படுத்தவும்.

3 உருளைக்கிழங்கு ஜூஸ்

உருளைக்கிழங்கில் அதிகமாக விட்டமின் சி உள்ளது. இவை வயதாகுவதை தடுக்கும். நமது சருமத்தில் உள்ள கொலாஜனை புதுப்பிக்கிறது. இதனால் சரும கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைந்து போய் விடும்.

தேவையான பொருட்கள்

1 சிறிய உருளைக்கிழங்கு

1 காட்டன் பஞ்சு

செய்முறை

உருளைக்கிழங்கை அரைத்து ஒரு மஸ்லின் துணியில் எடுத்து கொள்ளவும். எல்லா சாறையும் ஒரு சிறிய பெளலில் பிழிந்து கொள்ளவும்

இப்பொழுது காட்டன் பஞ்சை அதில் நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்ளே செய்யவும்.

20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்

வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

4 வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வயதாகுவதை தடுக்கும் விட்டமின் களான விட்டமின் ஏ, பி மற்றும் ஈ போன்றவை உள்ளது. அதே போல் பொட்டாசியம், ஜிங்க்கும் உள்ளன. இவை சருமத்தை பொலிவாக்கி இளமையாக இருக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

1 பழுத்த வாழைப்பழம்

1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்

1 டேபிள் ஸ்பூன் தேன்

1 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

செய்முறை

ஒரு மீடியமான பெளலில் வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து அதனுடன் ரோஸ் வாட்டர், தேன் கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும்.

பிறகு யோகார்ட்டை கலந்து கொள்ளவும்

பிரஷ்யை கொண்டு இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி விடவும்

20 நிமிடங்கள் காய வைத்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்

வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

5 கேரட் மற்றும் உருளைக்கிழங்கு
5 கேரட் மற்றும் உருளைக்கிழங்கு
கேரட்டில் உள்ள விட்டமின் ஏ சத்து சரும கொலாஜனை புதுப்பிக்கிறது. மேலும் சரும சுருக்கங்களை களைகிறது. உருளைக்கிழங்கில் உள்ள விட்டமின் சி சரும கோடுகளை மறைய செய்து எப்பொழுதும் முகம் இளமையுடன் காண உதவுகிறது.

தேவையான பொருட்கள்

1 சிறிய கேரட்

1 சிறிய உருளைக்கிழங்கு

கொஞ்சம் மஞ்சள் தூள்

கொஞ்சம் பேக்கிங் சோடா

தண்ணீர்

செய்முறை

கேரட் மற்றும் உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து நன்றாக பேஸ்ட் மாதிரி ஆக்கி கொள்ளவும்

அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிதமான பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

இப்பொழுது பிரஷ்யை கொண்டு முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவவும்

20 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

வாரத்திற்கு இரண்டு முறை இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

6 தேங்காய் பால்

தேங்காய் பாலில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதாகுவதை தடுக்கிறது. இவை சருமத்தை புதுப்பித்து, சருமம் மிருதுவாக இருக்க உதவுகிறது. மேலும் சரும கோடுகள் மற்றும் சுருக்கங்களை நீக்குகிறது.

தேவையான பொருட்கள்

3 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால்

1 காட்டன் பஞ்சு

செய்முறை

இப்பொழுது இந்த காட்டன் பஞ்சை தேங்காய் பாலில் நனைத்து முகத்தில் நன்றாக தடவிக் கொள்ளவும்.

15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்

வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

7 பாதாம் பருப்பு, சந்தன கட்டை மற்றும் ரோஸ்வுட் ஆயில்
7 பாதாம் பருப்பு, சந்தன கட்டை மற்றும் ரோஸ்வுட் ஆயில்
இந்த மூன்று அற்புதமான எண்ணெய்களும் சருமத்தை மிருதுவாக்குவதோடு சரும கோடுகள் மற்றும் வயதாகுவதை தள்ளி வைக்கிறது.

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய்

2/3 சொட்டுகள் ரோஸ்வுட் ஆயில்

3-4 சொட்டுகள் சந்தன எண்ணெய்

செய்முறை

எல்லா எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்

உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 3 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்

பிறகு ஒரு மணி நேரம் வைத்து இருந்து கழுவ வேண்டும்

தினமும் இரவில் இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

8 பப்பாளி

பப்பாளி நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. மேலும் இதிலுள்ள பப்பைன் என்ற என்ஜைம் சருமத்திற்கு புத்துயிர் கொடுப்பதோடு மூடிய சரும துளைகளை திறக்கிறது.

தேவையான பொருட்கள்

5/7 பழுத்த பப்பாளி துண்டுகள்

செய்முறை

பப்பாளி நன்றாக மசித்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும்

இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி கொள்ளவும்

20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

9 யோகார்ட்

யோகார்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் சுருங்கிய சரும துளைகளை திறந்து சருமத்தை பொலிவாக்குகிறது. மேலும் இவை சருமத்தை இறுக்கமடைய செய்கிறது. சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து சருமத்தை மிருதுவாக்குகிறது.

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

1 டேபிள் ஸ்பூன் தேன்

1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்.

1 விட்டமின் ஈ மாத்திரைகள்

கொஞ்சம் மஞ்சள் தூள்

செய்முறை

லெமன் ஜூஸ், யோகார்ட், தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும்

விட்டமின் ஈ மாத்திரையை பிரித்து அதில் உள்ள எண்ணெய்யை இதனுடன் கலந்து கொள்ளவும்

இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி கொள்ளவும்

20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

10 பாதாம் பருப்பு மற்றும் பால்

10 பாதாம் பருப்பு மற்றும் பால்
பாதாம் பருப்பில் உள்ள விட்டமின் ஈ சருமத்திற்கு புத்துயிர் கொடுத்து சருமத்தை மிருதுவாக்குகிறது.

தேவையான பொருட்கள்

8/10 பாதாம் பருப்பு

பால் ஊற வைப்பதற்கு

செய்முறை

பாதாம் பருப்பை இரவில் பாலில் ஊற வைக்கவும்

பிறகு இந்த கலவையை நன்றாக அரைத்து கொள்ளவும்

இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி கொள்ளவும்

30 நிமிடங்கள் கழித்து கழுவவும்

வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல ஜொலிப்பான முகத்தை பெறலாம்

11 ஸ்ட்ராபெர்ரீஸ்

ஸ்ட்ராபெர்ரியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் சி உள்ளது. இவை சரும கொலாஜன் உருவாக்கத்திற்கும், சரும கோடுகள் மற்றும் சுருக்கங்களுக்கும் பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்

3-4 ஸ்ட்ராபெர்ரீஸ்

செய்முறை

ஸ்ட்ராபெர்ரி பழங்களை மசித்தோ அல்லது அரைத்தோ பேஸ்ட்டாக்கி கொள்ளவும்

பிறகு ப்ரஷ்யை கொண்டு முகத்தில் அப்ளே செய்து 20 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும்.

பிறகு சாதாரண நீரில் கழுவவும்

வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரவும்

12 அவகேடா

அவகேடா பழத்தில் உள்ள அதிகப்படியான விட்டமின் ஈ சருமம் வயதாகுவதை தடுக்கிறது. மேலும் சரும கொலாஜனை புதுப்பிக்கிறது.

தேவையான பொருட்கள்

1 அவகேடா

செய்முறை

அவகேடா பழத்தின் குழிப்பகுதியை எடுத்து விட்டு மசித்தோ அல்லது அரைத்தோ பேஸ்ட்டாக்கி கொள்ளவும்

பிறகு ப்ரஷ்யை கொண்டு முகத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள்

15 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு கழுவவும்

வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

13 பூக்கள் மாஸ்க்

பூக்கள் சருமத்திற்கு பெரிதும் பயன்படுகின்றன. சாமந்தி பூ மணமாக இருப்பதோடு சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கிறது. ரோஜா பூக்கள் சருமத்திற்கு நல்ல நிறத்தையும் கொடுக்கிறது. மேலும் சரும துளைகளில் உள்ள அடைப்பையும் சரி செய்கிறது. செமோயில் பூ சரும பிரச்சினைகளை களைகிறது

தேவையான பொருட்கள்

4 சொட்டுகள் ஆலிவ் ஆயில்

1 கைப்பிடியளவு சாமந்தி பூ இதழ்கள்

1 கைப்பிடியளவு ரோஜா இதழ்கள்

1 கைப்பிடியளவு செமோயில் இதழ்கள்.

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் நன்றாக கலந்து அரைத்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும்.

ப்ரஷ்யை பயன்படுத்தி முகத்தில் தடவி கொள்ளவும்

20 நிமிடங்கள் வைத்து இருந்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்

பிறகு வழக்கமான டோனர் மற்றும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும்.

வாரத்திற்கு ஒரு முறை இதை செய்யவும்.

14 லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸ் இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்ட் ஆகும். சருமத்திற்கு நல்ல நிறத்தை தருவதோடு சருமத்தில் உள்ள கருப்புகளை களைகிறது.

தேவையான பொருட்கள்

பிழிந்த லெமன் ஜூஸ்

செய்முறை

சரும கருப்புகள், பருக்கள் மற்றும் ஏஜ் ஸ்பாட்ஸ் போன்ற பகுதிகளில் இந்த லெமன் ஜூஸை தடவவும்.

15 நிமிடங்கள் கழித்து கழுவவும்

ஒரு நாளைக்கு ஒரு முறை என்ற விதத்தில் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

15 அன்னாசி பழம்

ஆரம்ப காலத்திலயே வயதாகும் பிரச்சினைகளை சரி செய்கிறது. இதிலுள்ள நுண்ணிய ஊட்டச்சத்துக்கள், பைட்டோகெமிக்கல்கள் போன்றவை சருமம் வயதாகுவதை ஆரம்ப காலத்திலயே கண்டறிந்து அவற்றை களைகிறது.

தேவையான பொருட்கள்

1 பழுத்த வெட்டிய அன்னாசி பழம்

செய்முறை

வெட்டிய அன்னாசி பழத்தை 5 நிமிடங்கள் முகத்தில் தேய்க்க வேண்டும்

10 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு நீரில் கழுவவும்

வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

16 எஸன்ஷியல் ஆயில்

சரியான எஸன்ஷியல் ஆயில்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் சருமம் புதியதாகுவதை சரி செய்யலாம், ஏஜ் ஸ்பாட்ஸ்யை தடுக்கலாம், வறண்ட சருமத்தை சரி செய்ய முடியும்

தேவையான பொருட்கள்

5 சொட்டுகள் சந்தன எண்ணெய்

5 சொட்டுகள் ரோஸ் செரனியம் ஆயில்

5 சொட்டுகள் மல்லிகை பூ எண்ணெய்

5 சொட்டுகள் நேரோலி எண்ணெய் (விருப்பத்திற்கு ஏற்ப)

5 சொட்டுகள் ப்ராங்கின்சென்ஸ் ஆயில் (விருப்பத்திற்கு ஏற்ப)

செய்முறை

ஒரு சுத்தமான பாட்டிலில் இந்த எண்ணெய்களை கலந்து கொள்ளவும்

பிறகு 2-3 சொட்டுகள் எடுத்து உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ளவும்

ஒவ்வொரு நாள் இரவிலும் அப்ளே செய்வது நல்லது.

17 கரும்புச்சாறு

கிளைக்காலிக் அமிலம் இதில் உள்ளது. இவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமம் பொலிவாக உதவுகிறது. மேலும் சரும கொலாஜனை உருவாக்குகிறது.

தேவையான பொருட்கள்

2-3 டேபிள் ஸ்பூன் கரும்பு ஜூஸ்

கொஞ்சம் மஞ்சள் தூள்

செய்முறை

கரும்பு ஜூஸ் மற்றும் மஞ்சளை ஒன்றாக கலந்து கொள்ளவும்

ஏஜ் ஸ்பாட்ஸ், வீங்கிய கண்கள், சுருக்கங்கள் மற்றும் முகம் போன்றவற்றில் தடவிக் கொள்ளவும்

10 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்

வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

18 முட்டையின் வெள்ளை கரு

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஜிங்க், புரோட்டீன் போன்றவை உள்ளன. இவை சரும கொலாஜன் உருவாக்கத்திற்கும் சரும மிருது தன்மைக்கும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

1 வெள்ளை கரு

1/2 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம்

1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து முகத்தில் தடவி கொள்ளவும்

15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்

மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

19 நெல்லிக்காய் பொடி

எல்லாருக்கும் தெரியும் நெல்லிக்காய் கூந்தலுக்கு சிறந்தது என்று. அதே சமயத்தில் நெல்லிக்காய் சருமத்திற்கும் சிறந்தது. காரணம் இதிலுள்ள விட்டமின் சி சரும கொலாஜனை புதுப்பிக்கிறது.

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி

1 டேபிள் ஸ்பூன் தேன்

1 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

கொஞ்சம் சுடு தண்ணீர்

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள தேன் மற்றும் யோகார்ட் பொருட்களை நன்றாக கலந்து கொள்ளவும்

பிறகு நெல்லிக்காய் பொடி சேர்த்து சுடு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்

இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி கொள்ளவும்

15 நிமிடங்கள் கழித்து கழுவவும்

வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

20 விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் ஒரு பிசுபிசுப்பான எண்ணெய் ஆகும். இவற்றில் உள்ள குணமாக்கும் பொருட்கள் சரும கோடுகள் மற்றும் சரும சுருக்கங்களை சரி செய்கிறது. வறண்ட சருமம் உடையவர்களுக்கு இது மிகவும் சிறந்தது.

தேவையான பொருட்கள்

3-4 சொட்டுகள் விளக்கெண்ணெய்

செய்முறை

கொஞ்சம் விளக்கெண்ணெய்யை கையில் எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். மேல்நோக்கிய முறையில் மசாஜ் செய்யவும்.

இரவு முழுவதும் அப்படியே வைத்து இருந்து காலையில் கழுவவும்

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு பயன்படுத்தவும். நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

இத ஒருமுறை யூஸ் பண்ணுனா.. முகத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும் தெரியுமா! அப்ப இத படிங்க!

nathan

முட்டைக்கோஸ் ஃபேஸ் பேக்

nathan

சரும பொலிவையும் மெருகேற்ற வாழைப்பழ தோல்

nathan

உங்களுக்கு தெரியுமா முக பராமரிப்பில் தேனை பயன்படுத்துவதால் உண்டாகும் பலன்கள்…!!

nathan

முகத்தை வெள்ளையாக்க விரும்புவோர் செய்யும் தவறுகள்.!

nathan

மூன்றே நாட்களில் கருப்பான முகத்தை வெள்ளையாக்க 8 வழிகள்!

nathan

வறட்சியான சருமத்தை பராமரிக்கும் முறை

nathan

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

nathan

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…

nathan