26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
fever sick
மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! இரவில் மட்டும் காய்ச்சல் வருவதற்கான காரணங்கள்!!!

காய்ச்சல் என்றாலே சிரமம் தான். ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து காய்ச்சலின் அளவு மாறுபடும். சிலரால் அதை தாங்கி கொள்ள முடியும், ஆனால் பலரை அது பாடாய் படுத்தி விடும். காய்ச்சல் என்றால் அதில் பல வகைகள் உள்ளது. இரவு நேரத்தில் மட்டும் காய்ச்சலை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? சிலர் அதனை அனுபவித்திருக்கலாம்.

பகல் நேரத்தில் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, பல நேரங்களில் நமக்கு இரவில் மட்டுமே காய்ச்சல் அடிக்கும். இதனால் அமைதியற்ற இரவை கழிக்க வேண்டியிருக்கும். அதன் விளைவாக காலையில் சோர்வுடன் காணப்படுவீர்கள். உங்கள் உடலுக்கு தேவையான தூக்கமும் ஓய்வும் உங்களுக்கு கிடைக்காமல் போகும். இது உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். இரவில் மாட்டும் காய்ச்சல் வருவது பெரிய குறையாகவே உள்ளது.

ஒரு வேளை, நீங்கள் இரவில் மட்டும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தால், முதலில் அதற்கான அறிகுறிகளை கவனிக்க வேண்டும். ஒரு வேளை, அதற்கான அறிகுறிகள் ஒத்துப்போனால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இரவில் ஏற்படும் காய்ச்சலை ஒழித்து கட்ட அது ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டாமா? ஏன் இரவில் காய்ச்சல் உண்டாகிறது, வாங்க பார்க்கலாம்!

வெளிப்புற காய்ச்சலூட்டி

காய்ச்சலூட்டிகள் வெளியில் இருந்து பயணித்து உங்களின் உடலுக்குள் நுழைய முற்படும். இதனால் இரவில் மட்டும் அதிகமான காய்ச்சல் அடிக்கும். இவ்வகையான காய்ச்சலூட்டிகள் உடலில் நச்சுத் தன்மையை உண்டாக்கும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். ஒற்றைக்ககுழிக்கலம் (மோனோசைட்ஸ்) மற்றும் இரத்த விழுங்கணுக்கள் (மேக்ரோஃபேஜஸ்) ஆகியவற்றினால் இந்த காய்ச்சலூட்டிகள் உடலுக்குள்ளேயே உற்பத்தியாகும். வெளிப்புறத்தில் இருந்து காய்ச்சலூட்டிகள் உடலுக்குள் நுழையும் போது, மேலும் காய்ச்சலூட்டிகள் உற்பத்தியாக அது தூண்டும். இதனால் காய்ச்சல் அதிகரிக்கும். இரவு நேரத்தில் மட்டும் காய்ச்சல் அடிப்பதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாகும்.

மேல் சுவாசக்குழாய் தொற்றுக்கள்

சளி மற்றும் இதர சுவாசக்குழாய்தொற்றுக்கள் இருந்தாலும் கூட இரவு நேரங்களில் காய்ச்சலை உண்டாக்கும். சில நேரங்களில், சாதாரண சளியினால் கூட உங்கள் உடல் பாதிக்கப்பட்டு, அதனால் இரவில் காய்ச்சல் ஏற்படும். சில நேரம் குரல்வளை மற்றும் மூச்சுக் குழாய்களில் சுவாச குழாய் தொற்றுக்கள் ஏற்படுவதன் விளைவாக கூட இரவு நேரத்தில் காய்ச்சல் உண்டாகலாம். சாதாரண சளி சில நாட்கள் மட்டுமே நீடிக்கும். ஆனால் மற்ற தொற்றுக்கள் நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து நீடிக்கும்.

சிறுநீரக குழாய் தொற்றுக்கள்

சிறுநீரக குழாய் தொற்றுக்கள் இருக்கும் போதும் கூட இரவு நேரத்தில் காய்ச்சல் உண்டாகும். சிறுநீரக குழாயில் அதிகமான வலி இருந்து அதனுடன் நச்சுத் தன்மை கலந்திருந்தால் காய்ச்சல் உண்டாகும். இந்த நேரத்தில் மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும். உங்களுக்கு சிறுநீரக குழாய் தொற்றுக்கள் இருந்தால், சரியான மருந்துகளை உட்கொண்டு போதிய இடைவேளையில் மருத்துவரை அணுகுங்கள்.

சரும தொற்றுக்கள்

பல நேரங்களில் இரவு நேரத்தில் காய்ச்சல் அடிப்பதற்கு சரும தொற்றுக்கள் முக்கிய காரணமாக உள்ளது. தொற்றுக்கள் அதிகமாக இருந்து, அது உங்களுக்கு தொந்தரவை அளித்து வந்தால், அதனை என்னவென்று சோதிக்க வேண்டும். இரவு நேரத்ஹ்டில் காய்ச்சல் ஏற்படுவதற்கு இதுவும் கூட முக்கிய காரணமாகும்.

அலர்ஜிகள்

மருந்துகள் உண்ணுவதால் அலர்ஜி உண்டாகி, அதனால் உடலில் அழற்சிகள் ஏற்பட்டால், இரவு நேரத்தில் காய்ச்சல் அடிக்கும். சாதாரண அலர்ஜி பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். அதனால் அதனை சரிவர கவனித்து விட வேண்டும்.

Related posts

தொட்டினால் ஒட்டும் தொடாமலும் தொற்றும் கண்நோய்

nathan

குழந்தை பிறந்தவுடன் ஏன் பெண்கள் குண்டு ஆகிறார்கள் தெரியுமா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan

நமது உடலில் வயிறு செய்யும் வேலைகள்

nathan

ஏன் தெரியுமா மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது?

nathan

மலேரியாவை கட்டுப்படுத்தும் மர சூரிய காந்தி

nathan

இந்த மூலிகையை எங்க பார்த்தாலும் விட்றாதீங்க… ஏன் தெரியுமா?…

nathan

மகளுக்கு தந்தை சொல்லிக் கொடுக்க வேண்டியவை

nathan

உங்க காதலியின் ராசியை வைத்து, காதல்ல அவங்க எப்படிபட்டவங்கனு தெரிஞ்சுக்கணுமா?

nathan

திருமண வாழ்க்கையை குழப்பும் உறவுகளின் தலையீடு

nathan