* ஆரஞ்சு பழச்சாற்றுடன் மஞ்சள் பொடியை சேர்த்து கலந்த கலவையை முகத்தில் தடவி, நன்கு காய்ந்தவுடன் நீர் கொண்டு முகத்தினை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி பளிச்சிடும் வெண்மை நிறம் கிடைக்கும்.
* எலுமிச்சை சாறுடன் ரோஸ் வாட்டரை கலந்து பஞ்சு உருண்டையின் உதவியுடன் முகத்தில் தடவி 30 நிமிடங்கள் உலர விடவும். பின்பு சாதாரண தண்ணீரைக்கொண்டு முகத்தினை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள எல்லா மாசுக்களையும் நீக்கி தூய்மையாக வைக்க இந்த கலவை உதவுகிறது.
* எலுமிச்சை இலைத்துண்டுகளை போதுமான அளவு எடுத்து அரை கப் நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை முகத்தில் தடவி 15_20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவினால், முகத்தில் நல்ல ரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு அதிக பளபளப்பாக காணப்படும்.
* தக்காளி அல்லது ஆரஞ்சு பழச்சாற்றுடன் 2 மேசைக்கரண்டி அளவு தயிர் சேர்த்து, முகத்தில் தடவி உலர்ந்த பின்பு முகம் கழுவி வந்தால் எண்ணெய் சருமத்தினருக்கு அதிக அளவிலான பலன் தெரியும்.
பழங்களை பயன்படுத்தி பளிச்சிடும் பலனை பார்த்திடுங்கள்!!