30.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
625.500.560.350.160.300.053.800
மருத்துவ குறிப்பு

கிடுகிடுவென உங்கள் எடையினைக் குறைக்கலாம்! இரவு மட்டும் இதை குடிங்க…

அதிக உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் ஏராளம். மாறி வரும் வாழ்கை முறை மற்றும் உணவு முறை தான் இதற்கு காரணம். அப்படி உடல் பருமானால் அவதிப்படுபவர்கள் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக தொடந்து 4 வாரங்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள இந்த பானத்தைக் குடித்து வந்தால் மிக வேகமாக உடல் எடை குறையும், ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.

பக்க விளைவுகள் ஏதுமில்லாத இயற்கையான வழியில் எடையைக் குறைக்கும் பொருட்கள் நம்முடைய சமையலறையிலேயே இருக்கின்றன.

ஆம், நாமும் எவ்வளவோ எடை குறைக்கும் பானங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதைக் குடித்துப் பாருங்கள். நிச்சயம் 4 வாரங்களிலேயே உங்கள் உடல் எடையில் அபார மாற்றத்தைக் காண்பீர்கள்.

உடல் எடை குறைக்கும் பானம் : (Weight loss Drink)
இந்த உடல் எடை குறைக்கும் பானம் (Weight loss Drink)-ஐ எப்படி செய்வது..? அதற்கு தேவையான பொருட்கள் என்ன..? – எப்படி குடிப்பது..? என்ற தகவல்களை கீழே பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
சுக்குப்பொடி
மஞ்சள் தூள்
கருஞ்சீரகம்
எலுமிச்சை சாறு
தேன் (Optional)
செய்முறை
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் முக்காலில் இருந்து ஒரு ஸ்பூன் வரைக்கும் சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சுக்குப்பொடி என கடையில் வாங்குவதை விட, சுக்கு (காய்ந்த இஞ்சி)-யை வாங்கி வந்து சிறிய உரல் அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் மத்து கொண்டு இடித்து பொடியாக்கி கொள்ளுங்க.

அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியும், ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் போட்டு நன்கு கலக்குங்கள். கருஞ்சீரகத்தைப் பொடியாக்கிக் கூட சேர்த்துக்கொள்வது இன்னும் சிறப்பு.

இந்த கலவையை ஒரு நிமிடத்துக்குக் நன்கு கலக்குங்கள். அதன்பின் அந்த நீரில் ஒரு அரை எலுமிச்சைப் பழத்தின் சாறினைப் பிழிந்து விட்டு கலக்கி, வெதுவெதுப்பாக இருக்கிற பொழுதே தேநீர் அருந்துவது போல குடித்து விடுங்கள்.

குடிக்கும் முறை
வெதுவெதுப்பாக இருக்கும்போதே குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் கூட குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்தாலும் தவறில்லை. ஆறிய பிறகு குடிக்கக் கூடாது. அப்படிக் குடித்தால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.

இந்த பானத்தைப் பொருத்தவரையில், ஒரு மாதம் வரையிலும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் இந்த பானத்தைக் குடித்து வரலாம். அப்படி ஒரு மாதம் வரையிலும் குடித்தால் கிட்டதட்ட 15 கிலோ வரையிலும் குறைக்க முடியும்.

Related posts

மலச்சிக்கலைப் போக்கும் மலைவாழைப்பழம்!

nathan

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் விரைவில் இறக்கும் அபாயம் உள்ளதாம் – எதனால்?

nathan

வெள்ளையான பற்களை பெறுவதற்கான 5 ரகசியங்கள்!!!

nathan

கவணம் உடலில் இரத்தகட்டி இருப்பதை வெளிப்படுத்தும் 6 முக்கிய அறிகுறிகள் இவை தான்

nathan

கர்ப்பம் அடைவதற்கு தடையாக பெண்கள் நம்பும் மூடநம்பிக்கைகள்

nathan

எந்த வயதில் விட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்..?

nathan

தெரிஞ்சிக்கங்க… தொண்டை தொடர்பான நோய்களை குணமாக்கும் அற்புதமான இயற்கை மருத்துவ குறிப்புகள்

nathan

அவசியம் படிக்க..கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்… இது உண்மையா? பொய்யா?

nathan

குழந்தை நோய்களும் -ஹோமியோ மருத்துவமும்

nathan