25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.053. 8
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக கற்கள் உருவாவது ஏன்? இதன் ஆரம்ப அறிகுறி என்ன?

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பெரும் வலியை தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று.

பெரும்பாலும் சிறிய கற்கள் சிறுநீரில் வெளியேறிவிடும். அது வலி, எரிச்சலை தருவதில்லை. இருப்பினும் சிறுநீரில் வெளியேற முடியாத பெரிய கற்கள்தான் வலியை ஏற்படுத்துகின்றன.

இதன் அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால்,நோய் தீவிரமடைவதைத் தடுக்க முடியும்.

தற்போது சிறுநீரக கற்கள் உருவாவது ஏன்? இதன் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆரம்ப அறிகுறிகள் என்ன?

பொதுவாகவே சிறுநீரக கல் உருவாகும் நபருக்கு ஆரம்ப நாளில் எரிச்சல் ஏற்படும். இதுதான் தொடக்கக்கால அறிகுறி.

 

  • சிறுநீரின் நிறமும் மாறும்.

 

  • அடிக்கடி காய்ச்சல், குளிர் காய்ச்சல் வரலாம்.

 

  • உணவு செரிக்கும்போது அதிகப்படியான எரிச்சல் ஏற்படும்.

 

  • சிறுநீரின் நெடி, ஆட்டு சிறுநீர் போலக் கெட்ட நெடி வீசும்.

 

சிறுநீரக கல் தோன்றுவதற்கு முக்கியக் காரணங்கள் என்ன?

 

  • பொதுவாக அதிக மசாலா சேர்த்த உணவு, புளிப்பு சுவை, செரிமானத்துக்குச் சிரமப்படும் அளவுக்குச் சாப்பிடுவது.

 

  • இறைச்சி, முட்டை சார்ந்த பொருட்களை அதிகம் சாப்பிடுவது.

 

  • குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது

 

யாருக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம்?

 

  • பித்த உடல் வாகு உள்ளவர்களுக்கு சிறுநீரக கல் உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. சிறுநீரக கல் உருவாகி பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் பித்த உடல் வாகு கொண்டவர்களாக உள்ளனர்.

 

  • அதிகமாக வியர்வை வெளியேறுபவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம்.

 

  • அதிகப்படியான நேரம் மின்னணு பொருட்கள் மத்தியில் பணிபுரிவர்களுக்கு ஏற்படலாம்.

 

  • மற்றும் அதிக வெப்பம் வெளியிடப்படும் பகுதியில் நீண்ட நேரம் பணிபுரிவது, குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் பணிபுரிவது போன்ற செயல்களால் கூட சிறுநீரக கல் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

 

Related posts

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்

nathan

எச்சரிக்கை! தும்மல் போட்டாலே கருப்பை இறங்குமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…மூல நோய் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

nathan

தெரிந்துகொள்வோமா? 40 வயதை நெருங்கும் பெண்களுக்கு அவசியமான பரிசோதனைகள்

nathan

சூப்பரான கை வைத்தியம்!

nathan

ஆண்மை பெருக்கும் வால்நட்

nathan

தலைவலியை உடனேயே தீர்க்கும் எளிய வீட்டு மருத்துவம்!இதை முயன்று பாருங்கள்

nathan

மாலை அல்லது இரவில் கர்ப்ப பரிசோதனை செய்யலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ரகசிய கேமராவின் புதிய வடிவம் இதுதான்! உஷார்

nathan