25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
paru 2142402f
அழகு குறிப்புகள்முகப்பரு

பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய

பசு மஞ்சள் கிழங்கு 1, வேப்பம் தளிர் கொஞ்சம் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கப் போகுமுன் முகத்தைக் கழுவி இந்த விழுதை வடுக்களை மூடுவதுபோல் தடவுங்கள். 15 நிமிஷம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். இதனால் வடுக்களால் ஏற்பட்ட கருமை மறைந்து தோல் மிருதுவாகும்.

வேப்பங்கொழுந்து 2 கொத்து, கருந்துளசி 5 இலைகள் இந்த இரண்டையும் சேர்த்து அரைத்து அதனுடன் அரை டீஸ்பூன் கடலை மாசைக் கலந்து பருக்கள் மீது பூசி விடுங்கள். நன்றாகக் காய்ந்ததும் கலவையோடு சேர்த்து பருக்களும் உதிர்ந்துவிடும். பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள்.

முகம் மலர்ந்து விடும். மறுநாள் சிறு துண்டுகளாக்கிய வெட்டி வேர் -5, துளசி இலை 6 இவற்றைக் கொதிநீரில் போட்டு ஆவி பிடித்து பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு ஐஸ் கட்டிகளை பருக்கள் இருந்த இடத்தின் மேல் வைத்து ஒத்தி எடுத்தால் பருக்கள் இருந்த சுவடுகளே தெரியாமல் போய்விடும், தோலும் மிருதுவாகும்.

நித்திய மல்லிச் செடியின் இலைகளை கஸ்தூரி மஞ்சளோடு சேர்த்து அரைத்து பருக்களின்  மேல் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை நல்ல நீரால் கழுவிக் வந்தால், நாளடைவில் பருக்கள் மறைந்து விடும்.

Related posts

இவ்வாறான காரணங்களினால் தான் முகம் முதுமைத் தோற்றத்தை அடைகின்றது!…

nathan

ஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை!…

sangika

பிரபுதேவாவை உரிச்சு வச்சது போல் இருக்கும் அவரது மகன்..

nathan

அழகான கூந்தலுக்கு biotin உணவுகள்

nathan

ஸ்கின் லைட்டனிங் ,tamil beauty skin tips

nathan

வாய் புண்ணை சீக்கிரம் குணமாக்க எளிய வைத்தியம்!…

nathan

நீங்களே பாருங்க.! லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணை மணந்த நடிகர் மணிவண்ணன் மகன்!

nathan

உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!!!

nathan

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய பின்பற்ற வேண்டியவை

nathan