28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை ?

images (16)

  • உணவில் பச்சைக்காய் கறிகள் , பழங்கள், அதிகம் இருக்க வேண்டும் .
  • கால்சியம்  சத்து நிறைந்த உணவுகளை உன்ன வேண்டும் .
  • கர்ப்ப காலத்தில் வாந்தி  வரும்  இதனால் சாப்பிடமால் இருக்ககூடாது .பல வேளை களாக பிரித்து சாப்பிடலாம் . ஜூஸ் அதிகம் குடிக்கலாம் .

  • கர்ப்பிணிகள் வயிறு எப்போதும் காலியாக இருக்க கூடாது .
  • உடல் சோர்வாக இருக்கும் போது ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம் .
  • குமட்டுதல் வரும் போது எலுமிச்சை பழத்தை நுகர்ந்தால் ,குமட்டுதல் குறையும் .
  •  இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் .பேரிச்சை ,மாதுளை ,கீரை வகைகள் ,முருங்கைகீரை  சாப்பிடலாம் .
  • வெல்லம் சேர்த்த உணவு வகைகளை உண்ணலாம் .
  • காபி ,டீயை தவிர்த்து  பாலுடன் வேறு ஏதாவது கலந்து சாப்பிடலாம் .
  • உணவில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து கொள்ளலாம் .
  • காலையில் பழச்சாறு அதிகம் குடிக்க வேண்டும் .
  • மாதுளை பழம் சாப்பிடலாம் .
  • நாவல் பழம் சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்றும் ,குங்குமபூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது தவறான கருத்தாகும் .மனிதன் உடலில் நிறங்களை நிர்ணயிப்பது மெலனின் எனப்படும் நிறமிகளே.
  • கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிடுவதால் உடல் லேசாக கருத்து காணப்படும் , இது பிறகு மாறிவிடும் .இதனால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்பது தவறு .
  • கர்ப்பிணி பெண்கள் காலையில் சீக்கிரமாக சாப்பிட வேண்டும் .இதனால் இரத்தத்தில் சர்கரையின் அளவு குறையாமலிருக்கும் ,அடிக்கடி மயக்கம் வராது.
  • குழந்தை வளர வளர வயிற்று குடல் ஒரு பக்கம் தள்ளும் இதனால் அதிகம் சாப்பிட முடியாது ,சீக்கிரமும் பசிக்காது  . அந்த  நேரங்களில் ஜூஸ் ,முளைகட்டிய  தானியங்கள் , போன்றவற்றை பல வேலைகளாக பிரித்து சாப்பிட வேண்டும் .
  • பிரசவ காலத்திற்கு பின் உடற் பயிற்சி  செய்ய வேண்டும் அது வயிற்று  தசைகளை வலுபெற செய்யும்.
  • கர்ப்பிணிகள் தினம் ஒரு வாழை பழம் சேர்த்து கொள்ளலாம் .இது உடல் சூட்டை தணிக்கும் , மலசிக்கல் வராமால் தடுக்கிறது .
  • கர்ப்பகாலத்தில் அதிகம் தண்ணீர் குடித்தால் கால் வீங்கும்  என்பது தவறானது .
  • கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் . இதனால் மலசிக்கல் தடுக்கப்படும் .
  • பிரசவம் முடிந்தவுடன்  வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக துணியை வயிற்றில் கட்டகூடாது .பிரசவம்  முடிந்து ஆறு வாரம் கழித்து அதற்க்கான பெல்ட்டை அணியலாம் .
  • கர்ப்பகாலத்தில் சிலர்க்கு சுகர் ,தைராய்டு, இரத்தழுத்தம் பிரச்னை  உள்ளவர்கள் அதற்க்கான மருந்துகளை கட்டாயம் எடுத்தக்கொள்ள வேண்டும் . அது குழந்தையை பாதிக்காது .
  • அன்னாசி பழம் கொய்யா , பப்பாளி பழத்தை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் . இது உடலுக்கு சூட்டை தரும் பழம் என்பதால் இதை தவிர்ப்பது நல்லது .

Related posts

ஹெல்த் ஸ்பெஷல்,, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட்

nathan

அவசியம் படிக்க.. இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க… உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?…

nathan

தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ள தாமதிக்கலாமா? |

nathan

7 நாட்களில் அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் அற்புத முறை!

nathan

சுகப்பிரசவத்தை அளிக்கும் கர்ப்ப கால வாக்கிங்

nathan

புறந்தள்ளும் காய்கறிகளில் உண்டு எல்லையற்ற பலன்கள்

nathan

கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது ரொம்ப நல்லது!

nathan

கர்ப்பிணிகளுக்கு சிவப்பான குழந்தை பிறக்க இயற்கை வழிமுறைகள்

nathan

பெண்களே! வெள்ளைப்படுதல் அதிகமா இருக்கா? வெள்ளைப்படுதல் நோய்.!

nathan