28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 haircolour
தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்வதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

தற்போதுள்ள நவீன காலத்தில் சுருட்டை முடி உள்ள பெண்கள் தங்களின் கூந்தலை நேராக்க பியூட்டி பார்லர் சென்று கூந்தலை நேராக்கிக் கொள்கின்றனர். அவர்களில் சிலர் தற்காலிகமாகவும், நேராகவும் செய்து கொள்கின்றனர். இப்படி கூந்தலை நேராக்குவதால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா?

ஆம், கூந்தலை நிரந்தரமாக நேராக்க முயலும் போது, சரியான முறை என்னவென்று தெரிந்து கொள்வதுடன், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கூந்தலில் பிரச்சனைகளை சந்திக்கும் போது, அதனை சரியாக கையாள முடியும்.

இங்கு பியூட்டி பார்லர் சென்று கூந்தலை நேராக்குவதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து கூந்தலை நேராக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

அலர்ஜி

ஹேர் ஸ்ட்ரைட்னிங் என்னும் கூந்தலை நேராக்கும் சிகிச்சையை மேற்கொள்ளும் போது பயன்படுத்தும் பொருட்களில் உள்ள கெமிக்கல்களால் சில சமயங்களில் அலர்ஜி ஏற்படக்கூடும். இத்தகைய அலர்ஜி அனைவருக்கும் ஏற்பட வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஒருமுறை இந்த அலர்ஜி ஏற்பட்டால், பின் அவஸ்தைப்படக்கூடும். எனவே இதனை மேற்கொள்ளும் முன் ஒருமுறைக்கு நான்கு முறை யோசித்து பரிசோதித்துப் பார்த்து பின் மேற்கொள்ள வேண்டும்.

பொலிவிழந்த வறட்சியான கூந்தல்

முக்கியமாக கூந்தலை நேராக்குவதால், கூந்தல் அதிகம் வறட்சியடையக்கூடும். மேலும் தலையில் சுரக்கப்படும் இயற்கையான எண்ணெயானது முற்றிலும் நிறுத்தப்பட்டு, கூந்தல் பொலிவிழந்து, எப்போதும் வறட்சியுடன் இருப்பது போலவே காணப்படும்.

தோற்றத்தை மாற்ற முடியாது

நிரந்தர ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்யும் முன் பலமுறை யோசியுங்கள். ஏனெனில் தோற்றத்தில் மாற்றம் வேண்டுமென்று, ஒருமுறை ஹேர் ஸ்ட்ரைனிங் செய்த பின், மீண்டும் வேறு ஒரு ஹேர் ஸ்டைலை மாற்ற பல நாட்கள் காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், நிறைய பணம் செலவழிக்க வேண்டிவரும்.

கூந்தல் உதிர்தல்

ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்வதால் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் கூந்தல் உதிர்தல். ஏனென்றால் கூந்தலை நேராக்க பயன்படுத்தும் பொருட்களால் ஸ்கால்ப்பிற்கு அதிக அழுத்தம் ஏற்படுவதோடு, கெமிக்கல் அதிகம் இருப்பதால், அவை மயிர்கால்களை கடுமையாக தாக்கி, மயிர்கால்களை வலுவடையச் செய்து, கூந்தலை உதிரச் செய்யும்.

வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டும்

ஹேர் ஸ்ட்ரைட்னிங் முறையை ஒருமுறை செய்ய ஆரம்பித்தால், வாழ்நாள் முழுவதும் அதனை தொடர்ந்து செய்து வர வேண்டும். அதிலும் வருடத்திற்கு ஒருமுறை தவறாமல் செய்து வர வேண்டும் அல்லது முடியின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு செய்து வர வேண்டும். முறையான பராமரிப்பு இல்லாவிட்டால், பின் கூந்தல் உதிர்தல் அதிகரித்து, தலை வழுக்கை கூட ஏற்படலாம்.

Related posts

கட்டாயம் இதை படியுங்கள்..பெண்களையும் பாதிக்கும் வழுக்கை!

nathan

ஹேர்பேக் வாரத்தில் தொடர்ந்து 2 முறை செய்து வந்தால் தலைமுடி உதிர்வு கட்டுக்குள் வரும்.

nathan

அலட்சியம் வேண்டாம்? நீங்க இப்படியா தலைக்கு எண்ணெய் தேய்குறீங்க? அடர்த்தியான முடி கூட கொட்ட தான் செய்யும்…!

nathan

முடி உதிர்வு மற்றும் நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை கலரிங்!

nathan

பெண்களே தலைமுடி உதிர்விற்கு ‘குட்-பை’ சொல்லணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது?

nathan

முடி வளர்ச்சியைத் தூண்டும் இயற்கை முறையில் செய்யப்படும் வைத்திய குறிப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி…?

nathan

முடி அடர்த்தியாக வளர…

nathan