பேரிச்சம்பழத்தை பயன்படுத்தி முட்டையில்லாமல் செய்யக்கூடிய சத்தான கேக் இது.
தேவையான பொருட்கள்
- பேரிச்சம்பழம் – 20 (விதை நீக்கப்பட்டது )
- மைதா – 1 கப்
- பால் – 3 /4 கப்
- சர்க்கரை – 3 /4 கப்
- சமையல் சோடா – 1 தேக்கரண்டி
- எண்ணெய் – 1 /2 கப்
- அக்ஹ்ராட்,முந்திரி – 1 மேசைக்கரண்டி
செய்முறை
- பேரிச்சம்பழத்தை பாலில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்(விதை நீக்கப்பட்டபேரிச்சம்பழம்).
- வெதுவெதுப்பான பாலில் பேரிச்சம்பழத்தை விதை நீக்கிவிட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்(விதையுடன் கூடிய பேரிச்சம்பழம் ).
- இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- இதனுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- மைதா, சமையல் சோடா இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
- ஒவ்வொரு மேசைகரண்டி மாவு எடுத்து அரைத்தவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- இறுதியாக அக்ஹ்ராட்,முந்திரி ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
- பேக்கிங் பானில் கலவையை ஊற்றி பரப்பவும்.
- அவனை 350 F இல்முன்சூடு பண்ணவும்.
- பின்னர் இதை 350 Fஇல் 35 – 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும் அல்லது கத்தியை கேக்கில் நுழைக்கும் போது கத்தியில் கேக் ஒட்டாமல் வர வேண்டும்.