25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
17 1516165818 28 1425
மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! அடிக்கடி தலைவலியா? காரணம் மூளைக்கட்டியாக கூட இருக்கலாம்னு தெரியுமா?

நீண்டநாள் தலைவலிக்கு ஆளாகுபவர்கள் அதற்குரிய சிறப்பு சிகிச்சைக்குரிய டாக்டர்களை பார்ப்பது அவசியம். ஏனென்றால் சிலருக்கு மூளையில் கட்டி மெதுவாக வளரும். சிலருக்கு வேகமாக வளரும். சிலருக்கு மூளையில் ரத்தம் கொஞ்சமாகவோ, அதிகமாகவோ கசியும். அதை கண்டறிந்து உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வாந்தி, கை கால் வலிப்பு, நன்றாக இருக்கும் போதே மாறி, மாறி பேசுவது, மயக்கம் அடைதல் ஏற்படும்.

இவற்றில் ஒன்றோ, சிலதோ, அனைத்துமோ ஏற்படும். அத்தகைய பாதிப்பிற்கு ஆளாகாமல் இருக்க உடனடியாக ஸ்கேன் மூலம் பரிசோதனை மேற்கொண்டு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டும். ரத்தக்கசிவை நிறுத்த வேண்டும். இந்த பகுதியில் மூளைக்கட்டி எப்படி, எதனால் உண்டாகிறது, மூளைக்கட்டியை முன் கூட்டியே அறிந்து தடுப்பது எப்படி என்பது பற்றி காணலாம்.

 

 

 

 

 

எப்படி வளரும்?

உடம்பின் வெளிப்பகுதியில் கட்டி ஏற்பட்டால் அதனால் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. மூளைக்குள் ஏற்படும் கட்டி வளரும்போது அது வளர்வதற்கு இடமில்லாமல் உள்நோக்கியே வளரும், அத்தகைய கட்டி மூளையை நெருக்குவதால் மூளையின் செயல்திறன் தடைபடும். உடல் இயக்கத்தின் ஆதாரமான மூளை பாதிக்கும்போது, உடல் செயல்பாட்டிற்கு கேடு ஏற்படும்.

கவனம் தேவை

மூளையில் கட்டியோ, ரத்தக்கசிவோ இருப்பது கண்டறியப்பட்டால் கவனம் தேவை. ரத்த கொதிப்பு உள்ளவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள், உடம்பில் கொழுப்பு அதிகமுள்ளவர்கள் ஆகியோருக்கு ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆஞ்சியோகிராம்

ரத்தக்குழாயில் ஏற்படும் அழுத்தத்தால் ரத்தக்குழாய் பலூன் மாதிரி உப்பி வெடிக்கலாம். அதனால் கூட தலைவலியும், மயக்கமும் ஏற்படலாம். அவர்கள் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

விபத்து

இது தவிர தற்போது இருசக்கரத்தில் வேகமாக செல்லும்போது விபத்திற்குள்ளாவது, ஹெல்மெட் போடாததால் தலை பாதிப்புக்குள்ளாவது, வீட்டிலோ, வெளியிலோ கீழே விழுந்து தலை காயம் ஏற்படுவது, யாராவது தாக்குவதன் மூலம் தலையில் காயம் ஏற்படுவது ஆகியவற்றாலும் சிலருக்கு தலைவலி, மயக்கம் அல்லது சில நிமிடங்கள் அவ்வப்போது மயக்கம், வாந்தி, தலை சுற்றல் ஆகியவை ஏற்படும். அதுவும் ரத்தக்கசிவு காரணமாக இருக்கலாம்.

 

தாமதாகவும் உண்டாகலாம்

இத்தகைய சூழ்நிலைக்கு ஆளாகுபவர்கள் உடனடியாக ஸ்கேன் செய்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிலருக்கு விபத்து, கீழே விழுதல், தாக்குதல் காரணமாக உடனடியாக எந்த வித பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் 2 அல்லது 3 மாதத்திற்கு பிறகு ரத்தக்கசிவோ, கட்டியோ ஏற்படும். அப்போது ஏற்படும் அறிகுறிகளை உணர்ந்து தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை பரிசோதனை மூலம் உறுதி செய்து ஆபரேஷன் மூலம் குணப்படுத்த வேண்டிய நிலை வரலாம்.

வயது

மூளைக்கட்டி எந்த வயதிலும் ஏற்படலாம். இது சிறியவர் பெரியவர் என்ற வித்தியாசம் பார்ப்பது கிடையாது. மூளைக்கட்டி ஏற்படுவதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

காரணிகள்

மரபுக் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கதிர்வீச்சு அபாயம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அறிகுறிகள் மூளைக்கட்டியின் அளவு, வகை, இடத்தைப் பொருத்தது.

 

வகைகள் என்ன?

பெரியவர்களுக்குப் பரவலாக ஏற்படும் மூளைப் புற்றுக்கள், நரம்பு நார்த் திசுக்கட்டி, தண்டு மூளைப்புற்று மற்றும் நரம்பு திசுக் கட்டி.

சிறுவர்களுக்கு ஏற்படும் முதன்மை மூளைப் புற்றுக்கள் மூல உயிரணுப்புற்று, நரம்புத்திசுப் புற்றுவகை I அல்லது II, பலவகை அணுக்கட்டிகள், மூளை மூல அணு நரம்புத் திசுக்கட்டி ஆகியவை.

மருத்துவம்

மூளைக்கட்டிகள், மருத்துவ வரலாறு, உடல் பரிசோதனை, பலவகை சிறப்பு சோதனைகளால் கண்டறியப்படுகின்றன.

அறுவை, கதிர்வீச்சு, வேதியற்சிகிச்சை அல்லது இவைகளை இணைத்து மூளைக்கட்டிக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

சாதாரணமான காரணங்கள்

1.தினம் 6 லிருந்து 8 மணி நேரம் தூங்காததால் (Sleep deficit) தலைவலி உண்டாகலாம். எனவே சரியான தூக்கம் அவசியமாகும்.

2.தேவையான அளவு தண்ணீர் பருகாததால், உச்சி வெயிலில் அலைவதால் (Dehydration) தலைவலி உண்டாகும். எனவே உடலுக்கு போதுமான அளவு நீர் கிடைக்க நிறைய தண்ணீர் குடியுங்கள்

 

சாப்பிடுதல்:

3.வேளாவேளைக்கு உணவு அருந்தாமையால் (Hypoglycemia) கூட தலைவலி உண்டாகலாம். சற்று சாப்பிட தாமதமானால் கூட தலைவலி வருவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். எனவே நேரநேரத்திற்கு சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

மின்ணனு சாதனங்கள்

4. கண்ணுக்கு அதிகப்படியான வேலை கொடுப்பதால்… டி.வி., செல்போன், கம்ப்யூட்டர், வாசித்தல் என கண் களைப்படைவதால் தலைவலி உண்டாகலாம். எனவே தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னர் வரை டிவி, செல்போன், கம்யூட்டர் போன்றவற்றை பார்க்க கூடாது.

5. கோபம், எரிச்சல், வருத்தம் போன்ற மன ஓட்டத்தினால் கூட தேவையற்ற தலைவலிகள் உண்டாகலாம். எனவே மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தொடர் தலைவலி

தொடர்ச்சியான தலைவலி இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில் அது மூளைக்கட்டி இருப்பதன் அறிகுறியாகும்

 

பேசுவதில் தடுமாற்றம்

பேசும் போது தடுமாற்றம், தெளிவற்ற பேச்சு மற்றும் பார்வை இழப்பு ஆகியவை கூட மூளைக்கட்டியின் அறிகுறிகள் ஆகும்.

சோம்பல்

பலவீனம் மற்றும் சோம்பல் போன்ற உணர்வுகளும், நம்முடைய கை, கால்களின் செயலிழப்பு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் அது மூளைக்கட்டி இருப்பதை குறிக்கும்.

குமட்டல்

குமட்டல் அல்லது வாந்தி போன்ற வயிற்றுக் கோளாறுகள் மற்றும் உடல் ஆரோக்கியமின்மை போன்ற பிரச்சனை நீண்ட காலம் நீடித்தால், அது மூளைக் கட்டி இருப்பதன் அறிகுறி.

 

மனநிலை மாற்றம்

மூளையில் கட்டி உள்ளவர்களுக்கு அடிக்கடி மனநிலை மாற்றம் அடையும். அதாவது கோபம், பதட்டம், சிரிப்பு போன்று எந்த மனநிலையிலும் அடிக்கடி மாறுவார்கள்.

ஹார்மோன்

மூளையில் கட்டி ஏற்பட்டால் அது பிட்யூட்டரி சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்களை பாதிக்கும். அதனால் பெண்கள் கருவுறாமை போன்ற பிரச்சனையை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகிறது.

சாய்ந்தவாறு நடக்கும் நிலை

நம் உடல் சமநிலையினை இழந்து, ஒருபுறமாக சாய்ந்தவாறு நடக்கும் நிலை ஏற்பட்டால், அது மூளையில் கட்டி இருப்பதை குறிக்கிறது.

 

காது சரியாக கேட்காமல் இருப்பது

காது சரியாக கேட்காமல் இருக்கும் நிலை உண்டாகும். இல்லை என்றால் கேட்பதை சரியாக புரிந்து கொள்ளாத நிலை உண்டாகும். இது போன்ற நிலை இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

Related posts

உங்களுக்கு கண் அடிக்கடி அரிக்குதா? சூப்பரா பலன் தரும்!!

nathan

கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிய உதவும் வித்தியாச தகவல்கள்! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

அவசியம் படிக்க.. வயிற்று வலி வருவதற்கான காரணங்கள்

nathan

விவாகரத்தான பெற்றோரால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு

nathan

டாட்டூ நல்லதா?

nathan

லவ்வர் வேணுமா. மருந்து சாப்பிடுங்க.

nathan

உங்களுக்கு தெரியுமா அம்மைத் தழும்புகளை போக்கும் ஓமவல்லி!

nathan

பெண்களே நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறீர்களா என்பதை எப்படி கண்டறிவது?

nathan

சிறுநீரக கல் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேற இத வடி கட்டி குடிங்க..சூப்பர் டிப்ஸ்..

nathan