29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
24 murungai k
சைவம்

சுவையான முருங்கைக் கீரை பொரியல்

முருங்கை கீரை சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறுவதோடு, உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும். அதிலும் இதனை பொரியல் போன்று செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல், இது சாம்பார் சாதம், நெய் சாதம் போன்றவற்றிற்கு சூப்பரான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

இப்போது அந்த முருங்கைக் கீரை பொரியல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

முருங்கைக் கீரை – 2 கப்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

சர்க்கரை – 1/4 டீஸ்பூன்

துருவிய தேங்காய் – 1/4 கப்

உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – 3/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

வர மிளகாய் – 2

செய்முறை:

முதலில் முருங்கைக் கீரையை நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் முருங்கைக் கீரையை சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரை போட்டு, நன்கு வதக்கி விடவும்.

வேண்டுமானால், அதில் சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி, மிதமானது தீயில் 5-10 நிமிடம் கீரையை நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.

எப்போது கீரையின் அளவானது நன்கு சுண்டி பாதியாக காட்சியளிக்கிறதோ, அப்போது, அதில் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து, ஒருமுறை கிளறி விட்டு இறக்கினால், சுவையான முருங்கைக் கீரை பொரியல் ரெடி!!!

Related posts

சிம்பிளான… பாலக் பன்னீர் ரெசிபி

nathan

பொங்கல் ஸ்பெஷல்: கதம்ப சாம்பார்

nathan

செய்வது எப்படி உருளைக்கிழங்கு கார குழம்பு

nathan

சத்தான பட்டர் பீன்ஸ் – கேரட் பொரியல்

nathan

சூப்பரான சுவையான கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி?

nathan

பனீர் வெஜ் மின்ட் கறி

nathan

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

nathan

வெண்டைக்காய் சாதம்

nathan

எள்ளு சாதம்

nathan