மருக்கள் முகத்தின் அழகை கெடுக்க கூடியது.. இது முகம், கைகள், இடும்பு பகுதிகள் போன்ற இடங்களில் அதிகமாக வரக்கூடியது. இதனால் ஆபத்து ஒன்றும் இல்லை என்றாலும் கூட, இது அழகினை கெடுப்பதாக உள்ளது.. ஒரு சிலருக்கு இது மிக அதிகளவில் இருக்கும்.
சிலர் இந்த மருகினை போக்க அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர்.. ஆனால் இது பாதுகாப்பானது தானா? அழகினை பெற வேண்டும் என்பதற்காக சில ஆபத்தான வழிமுறைகளை கையில் எடுப்பதும் கூடாது…
ஆனால் நமது இயற்கை அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருப்பதுடன், நமக்கு எந்த பிரச்சனையையும் தாராததாக உள்ளது.. வீட்டில் உள்ள சில பொருட்களின் மூலமாகவும், நமக்கு எளிதாக கிடைக்க கூடிய சில பொருட்களின் மூலமாகவுமே நாம் எளிதாக இந்த மருக்களை நீக்கலாம். இது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.
பெருங்காயம்
கட்டி பெருங்காயத்தை தண்ணீரில் ஊறவைத்து, அதை தினமும் மருவின் மேல் வைக்க மறையும்.
விளக்கெண்ணெயும், மஞ்சளும் குழைத்து வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று மமறை வைக்க மறையும்.
இஞ்சி
தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.
அன்னாசி
இது மருக்களைப் போக்க உதவும் மற்றொரு வழியாகும். அதற்கு அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
வெங்காய சாறு
வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.
வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் நமக்கு மளிகை கடைகளிலேயே எளிதாக கிடைக்க கூடிய ஒன்றாகும். இது அழகை பேணி பாதுகாக்க உதவியாக உள்ளது. ஆப்பிள் சீடர் வினிகரை மரு உள்ள இடத்தில் காட்டன் கொண்டு தேய்த்து வந்தாலும், அது விரைவில் உதிர்ந்துவிடும்.
டீ ட்ரீ ஆயில்
இந்த முறைக்கு முதலில் சருமத்தில் சோப்பு கொண்டு தேய்த்து கழுவி விட்டு, பின் டீ ட்ரீ ஆயிலை மரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் இருக்கும். இருப்பினும். இதனை தினமும் மூன்று முறை செய்து வந்தால், மருக்களானது எளிதில் உதிரும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மரு உள்ள இடத்தில் தேடவி, 20-15 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும், மருக்கள் சீக்கிரம் போய்விடும்.
பூண்டு
பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியைக் கொண்டு கட்டி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். மேலும் இந்த முறையை தினமும் மூன்று முறை செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.
கற்றாழை
கற்றாழையில் உள்ள நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தகைய நன்மைகளில் ஒன்று தான் மருக்களைப் போக்குவது. அதற்கு கற்றாழை ஜெல்லை மரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வேண்டும்.
ஆளி விதைகள்
ஆளி என்ற விதையை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி தினமும் பருவில் தடவிவர வேண்டும். அவ்வாறு தடவி வந்தால் மரு நாளடைவில் கொட்டிவிடும். பேஸ்டை தடவி விட்டு அதன் மேல் பேண்டேஜ் ஒட்டினால் மிக நல்லது.
பூண்டு
பூண்டு பல்லை நன்றாக பேஸ்ட் போல் ஆக்கி அதை மரு இருக்கும் பகுதிகளிலும் மருவின் மீதும் தடவி விட்டு அதன்மேல் பேண்டேஜ் ஒட்டிவிடவும்.
கற்பூர எண்ணெய்
கற்பூர எண்ணையை தினமும் மருவின் மீது தடவி வர மரு நாளடைவில் கொட்டிவிடும். மேலும் மருக்கள் வளராமல் தவிர்க்கலாம் கற்பூர எண்ணை கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் குழைத்தும் பூசலாம்.
சுண்ணாம்பு
வீட்டில் வெற்றிலை போடுபவர்கள் இருந்தால் அவர்களிடம் கண்டிப்பாக சுண்ணாம்பு இருக்கும். இல்லை என்றால் இது ஒரு ரூபாய்க்கு கூட கடைகளில் கிடைக்கு. இந்த சுண்ணாம்பை நன்றாக குழைத்து மருவின் மீது தடவி வந்தால் மரு தானாக பொரிந்து விழுந்துவிடும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல.. இது சருமத்தில் உள்ள பிரச்சனைகளை போக்கவும் உதவியாக உள்ளது. இந்த உருளைக்கிழங்கினை மசித்து பசை போல் ஆக்கி தினமும் தடவி வர மரு பொரிந்துவிடும்.
அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி என்ற மூலிகையுள்ளது. இது மணற்பாங்கான இடங்களிலும் வயல் காட்டிலும் விளையக்கூடியது. பூமியின் மீது படர்ந்திருக்கும். இத்தாவரத்தை கிள்ளினால் அதில் இருந்து பால் வரும். அந்தப்பாலை தினமும் மருவின் மீதும் முகப்பருக்கள் மீதும் தடவி வந்தால் முகப்பரு மற்றும் மருக்கள் காணாமல் போகும் கொஞ்சம் அதிகமாக பால் எடுத்து நிறைய மருக்கள் உள்ளபகுதிகளில் தடவினால் முகப்பருக்களோடு சேர்ந்து மருவும் சென்று விடும். தடயமும் மறைந்து விடும்.
விட்டமின் இ
விட்டமின் இ சரும பிரச்சனைகளை போக்குவதற்கு உதவியாக உள்ளது. விட்டமின் இ கேப்சூல்கள் மருந்துக் கடைகளில் எளிதாக கிடைக்கும். இதனை வாங்கி, அதில் துளையிட்டு, அதனுள் உள்ள திரவத்தை மட்டும் வெளியில் எடுத்து அதனை மருக்கள் மீது வைத்தால், சீக்கிரமாக மருக்கள் நீங்கிவிடும்.
வாழைப்பழ தோல்
வாழைப்பழ தோலை வெளியில் எறிந்துவிடாமல், அதனை மருக்கள் உள்ள இடங்களில் போட்டு வைத்தால் மருக்கள் சில நாட்களில் உதிர்ந்து விடுவதை காணலாம்.
பப்பாளி தோல்
பப்பாளி அழகை பேணி காப்பதில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த பப்பாளி தோலை மருக்கள் உள்ள இடங்களில் இட வேண்டும். அரை மணி நேரம் கழித்து இது நன்றாக காய்ந்ததும் எடுத்து விட்டு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இம்முறையை சில முறைகள் செய்தாலே மருக்கள் விரைவில் விழுந்து விடும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை விளக்கெண்ணையில் கலந்து இதனை மருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்து கழுவி வர வேண்டும். இவ்வாறு செய்வதால் மருக்கள் விரைவில் குணமாகிவிடுவதை காணலாம்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை சரும பிரச்சனைகளை குணப்படுத்தும் ஒரு முக்கிய பொருளாக உள்ளது. இந்த இலவங்கப்பட்டை பொடியை தேனில் கலந்து முகத்திற்கு பேக் போட வேண்டும். இது போன்று செய்து வந்தால் முகத்தில் உள்ள மருக்கள் விரைவாகவே மறைந்துவிடுவதை காணலாம்.