24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
DS
சமையல் குறிப்புகள்

சுவையான வெஜிடேபிள் கிச்சடி ரெசிபி

குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான ரெசிபி ஒன்று செய்து தர நினைக்கிறீர்களா? அப்படியானால், வெஜிடேபிள் கிச்சடி ரெசிபியை செய்து கொடுங்கள். இதில் காய்கறிகளை ஒன்று சேர்த்து செய்வதால், குழந்தைகளுக்கு வேண்டிய சத்துக்களாது கிடைக்கும். மேலும் காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்க, இது ஒரு சிறந்த முறையாகும்.

மேலும் இந்த ரெசிபியை காலை மற்றும் மதிய வேளையில் கூட செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த வெஜிடேபிள் கிச்சடியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அரிசி – 1 கப்

பாசிப்பருப்பு – 1/2 கப்

உருளைக்கிழங்கு – 2 (நறுக்கியது)

குடைமிளகாய் – 1 (நறுக்கியது)

பச்சை பட்டாணி – 1/2 கப்

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

இஞ்சி – 1 இன்ச் (துருவியது)

நெய் – 1-2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை

சீரகம் – 1 டீஸ்பூன்

மிளகு – 4-6

கிராம்பு – 4

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை நீரில் ஒருமுறை கழுவி, இரண்டையும் நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் மிளகு, கிராம்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, காய்கறிகள் நன்கு வேகும் வரை குறைந்தது 3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

காய்கறிகளானது நன்கு வெந்ததும், அதில் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை மீண்டு கழுவி சேர்த்து கிளறி, பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர வதக்கி விட வேண்டும்.

பின் அதில் 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒருமுறை கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான வெஜிடேபிள் கிச்சடி ரெடி!!!

Related posts

தோசை சாண்ட்விச்

nathan

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்….

sangika

முட்டை சப்பாத்தி ரோல்

nathan

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி…

nathan

சுவையான மலாய் பன்னீர் கிரேவி

nathan

ஆரோக்கியமான ஜீரண இடியாப்பம்!

sangika

தக்காளி பேச்சுலர் ரசம்

nathan

தயிர் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

nathan

சூப்பரான சேனைக்கிழங்கு பொரியல்

nathan